புதுடெல்லி: கடந்த ஆண்டில் 66 விழுக்காடாக இருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு, ஒரே ஆண்டில் 24 விழுக்காடாகக் குறைந்துவிட்டதாக 'இந்தியா டுடே' ஊடகம் மேற்கொண்ட கருத்தாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொவிட்-19 நெருக்கடியை அவர் கையாண்ட விதமே இதற்கு முக்கியக் காரணம் என்று 'நாட்டின் மனநிலை' என்ற அந்தக் கருத்தாய்வு கூறுகிறது. விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை விகிதம் ஆகியவை மோடி தலைமையிலான அரசின் பெரும் தோல்விகளாக ஆய்வில் பங்கேற்றோர் கூறினர். அதே நேரத்தில், இப்போது பொதுத் தேர்தல் நடந்தாலும் பாஜக 298 தொகுதிகளில் வெல்லும் என்றும் கருத்தாய்வு முடிவுகள் கூறுகின்றன.
மோடி செல்வாக்கு 24 விழுக்காடாகச் சரிந்தது
1 mins read
-

