இந்தியாவில் போலி தடுப்பூசி

இந்தியாவில் போலி தடுப்பூசி

2 mins read
bf373be0-e3c0-4149-99e8-d82fbc5e1bc5
-

புது­டெல்லி: இந்­தி­யா­வி­லும் ஆப்­பி­ரிக்­கா­வி­லும் போலி கொரோனா தடுப்பூசிகள் புழக்­கத்­துக்கு வந்­துள்­ள­தாக உலக சுகா­தார அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது. இது­கு­றித்து உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அந்த அமைப்பு வலியுறுத்தி உள்­ளது.

நாடு முழு­வ­தும் பொது­மக்­களுக்கு கோவி­ஷீல்டு தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு வரு­கின்­றன. இது­வரை 486 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­தத் தடுப்­பூ­சியைத் தயா­ரிக்­கும் இந்­திய சீரம் நிறு­வ­னம் ஆசியா, ஆப்­பி­ரிக்கா, தென் அமெரிக்க நாடு­க­ளுக்­கும் கோவி­ஷீல்டு தடுப்பூ­சியை விநி­யோ­கித்து உள்­ளது.

இந்­நி­லை­யில் இந்­தி­யா­வி­லும் உகாண்டா நாட்­டி­லும் போலி கோவி­ஷீல்டு தடுப்­பூ­சி­கள் புழக்­கத்­துக்கு வந்­துள்­ளது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

நோயா­ளி­கள் மட்­டத்­தில் இந்­தப் போலி தடுப்­பூ­சி­க­ளின் பயன்­பாடு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கும் உலக சுகா­தார அமைப்பு, இதன் விளை­வு­கள் மோச­மாக இருக்­கும் என எச்­ச­ரித்­துள்­ளது.

தடுப்­பூ­சி­க­ளுக்­கென உள்ள தனி அடை­யா­ளம், அவற்­றின் கலவை அள­வு­கள் ஆகி­ய­வற்றை வைத்து அவை அசலா, போலியா எனக் கண்­ட­றி­கி­றார்­கள். அந்த வகை­யில் இந்­தி­யா­வி­லும் உகாண்­டா­வி­லும் போலி தடுப்­பூ­சி­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து, உல­க­ளா­விய பொது சுகா­தா­ரத்­துக்கு ஆபத்து ஏற்­ப­டுத்­தும் என உலக சுகா­தார நிறு­வ­னம் கவலை தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதி­கா­ரி­கள் நடத்திய திடீர் சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது கைப்­பற்­றிய தடுப்­பூ­சி­க­ளைப் பரி­சோ­தித்­த­போது அவை போலி­யா­னவை எனத் தெரி­ய­வந்­தது.

பின்­னர் அவை சீரம் இந்­திய நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. அதை­ய­டுத்து அந்­நி­று­வ­ன­மும் அவை போலி­யா­னவை என உறுதி செய்­தது.

இந்­நி­லை­யில், போலி தடுப்­பூ­சி­க­ளால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய மக்­கள், சுகா­தார அமைப்­பின்­மீது கூடு­தல் சுமை ஏற்­படும் என்­றும், போலி தயா­ரிப்­பு­களை புழக்­கத்­தில் இருந்து கண்­ட­றிந்து அகற்­று­வது முக்­கி­யம் என்­றும் உலக சுகா­தார அமைப்பு வலி­யு­றுத்தி உள்­ளது.