டெல்லியில் குண்டர் கும்பல், போலிசார் இடையே துப்பாக்கிச்சூடு

டெல்லியில் குண்டர் கும்பல், போலிசார் இடையே துப்பாக்கிச்சூடு

1 mins read
c80d3806-3946-4b6b-b93b-ecb462522c62
-

புது­டெல்லி: குண்­டர் கும்­ப­லைச் சேர்ந்த இரு­வரை துப்­பாக்­கிச்­சூட்­டுக்­குப் பின் டெல்லி காவல்­துறை கைது செய்­துள்­ளது.

இரு­வ­ரும் 'ரதி' என்ற குண்­டர் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் என போலி­சார் தெரி­வித்­த­னர்.

கௌஷல் என்ற மற்­றொரு குண்­டர் கும்­ப­லைச் சேர்ந்­த­வரை கொலை செய்­வ­தற்­காக இரு­வ­ரும் காத்­தி­ருந்த வேளை­யில் போலி­சார் சுற்றி வளைத்­த­னர்.

நேற்று காலை டெல்­லி­யின் பர­ப­ரப்­பான பகு­தி­களில் ஒன்­றான துவா­ர­கா­வில், 'ரதி' குண்­டர் கும்­ப­லைச் சேர்ந்த கரண், ஸீனத் ஆகிய இரு­வ­ரும் காத்­தி­ருந்­த­னர். இது குறித்து போலி­சா­ருக்கு ரக­சிய தக­வல் கிடைத்­தது.

அதன் பேரில் போலி­சார் அங்கு சென்ற போது கர­ணும் ஸீனத்­தும் அவரை நோக்கி துப்­பாக்­கி­யால் சுட்­ட­னர். இதை­ய­டுத்து போலி­சா­ரும் திருப்­பிச் சுட்­ட­தால் அப்­ப­கு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது.

இந்த மோத­லின் முடி­வில் இரு ரவு­டி­களும் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் அவர்­க­ளி­டம் விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ரதி என்ற குண்­டர் கும்­ப­லின் தலை­வன் தற்­போது குற்ற வழக்கு ஒன்­றில் தண்­டனை பெற்று சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ளான். இந்­நி­லை­யில் அவ­னது உத்­த­ர­வின் பேரில் எதிரி கும்­ப­லைச் சேர்ந்த கௌஷலை கொலை செய்ய முயற்சி நடந்­துள்­ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.