பிரதமர் மோடி: அழிவு சக்திகள் நிரந்தரமல்ல

பிரதமர் மோடி: அழிவு சக்திகள் நிரந்தரமல்ல

2 mins read
08401f47-a8f0-40e0-bea6-9356b549f3f3
சோம்நாத் கோயில் நமது கலாசாரத்திலிருந்து பிரிக்க முடியாத அங்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். படம்: டுவிட்டர் மோடி. -

புது­டெல்லி: "அழிவு மற்­றும் பயங்­க­ர­வாத சக்­தி­கள் சில காலத்­துக்கு மட்­டுமே ஆதிக்­கம் செலுத்த முடி­யும். ஆனால் ஒருபோதும் நிரந்­த­ர­மாக முடி­யாது" என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

ஆப்­கா­னிஸ்­தானை தலி­பான் படை கைப்­பற்றி உள்ள வேளை­யில் திரு மோடி­யின் கருத்து வெளி­யா­கி­யுள்­ளது.

"அழி­வுக்­குப் பாடு­படும் படை­களும் பயங்­கரவாதம் மூலம் பேர­ர­சு­களை உரு­வாக்­கும் சித்­தாந்­தங்­களும் சில காலத்­துக்கு ஆதிக்­கம் செலுத்­த­லாம். ஆனால் மனி­த ­குலத்தை அவற்றால் ஒடுக்க முடி­யாது. இதனால் அவை நிரந்­தர மாக நீடிக்க முடியாது," என்று அவர் கூறி­யுள்­ளார்.

குஜ­ராத் மாநி­லத்­தில் பல்­வேறு திட்­டங்­களை காணொளி மூலம் தொடங்கி வைத்து அவர் உரை­யாற்­றி­னார்.

"சோம்­நாத் கோயில் நூற்­றாண்­டு­களில் பல முறை தாக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் மீண்­டும் மீண்­டும் எழுச்சி அடைந்­துள்­ளது. நம்­பிக்­கையை பயங்­க­ர­வா­தத்­தால் அழிக்க முடி­யாது," என்று திரு மோடி குறிப் பிட்டார்.

குஜ­ராத் மாநி­லம் சோம்­நாத்­தில் ரூ 3.5 கோடி மொத்த மதிப்­பீட்­டில் ஸ்ரீ சோம்­நாத் அறக்­கட்­ட­ளை­யால் பழைய (ஜுனா) சோம்­நாத் கோயில் வளா­கம் சீர­மைக்­கப்­பட்­டுள்­ளது.

பக்­தர்­க­ளின் பாது­காப்பை கருத்­தில் கொண்டு அதிக இட­வ­ச­தி­யு­டன் பழைய கோயில் வளா­க­மும் புன­ர­மைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆன்­மிக மற்­றும் பாரம்­ப­ரிய தலங்­க­ளுக்கு புத்­தாக்­கம் அளிப்­ப­தற்­கான பிர­சாத் திட்­டத்­தின்கீழ் ரூ47 கோடி மதிப்­பீட்­டில் சோம்­நாத் நடை­பாதையும் அமைக்­கப்­பட்­டுள்­ளது என்று 'தி இந்து திசை' வெளி­யிட்ட தக­வல் தெரி­வித்­தது.

சுற்­றுலா மற்­றும் பய­ணத்­துறை போட்­டித்திறன் குறி­யீட்­டில் 2013ல் 65வது இடத்­தில் இருந்த இந்­தியா, 2019ல் 34க்கு முன்­னே­றி­யி­ருப்பதை சுட்­டிக்­காட்­டிய திரு மோடி, ஆன்­மிக சுற்­றுலா மூலம் இளை­யர்­ களுக்கு வேலை வாய்ப்­பு­கள் பெரு­கும் என்­றார்.

"நமது நாட்­டில் ஆன்­மிக சுற்­று­லாவை நாம் வலுப்­ப­டுத்த வேண்­டும். இது இளை­யர்­க­ளுக்கு வேலை­ வாய்ப்­பு­களை வழங்­கும்.

"அது­மட்­டு­மின்றி இளை­ஞர்­கள் நமது கடந்த காலத்­தைப் பற்­றிய அறி­வைப் பெறு­வார்­கள். நம்­பிக்­கையை பயத்­தி­னால் ஒடுக்க முடி­யாது. கடந்த காலத்­தி­லி­ருந்து நாம் இத­னைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

நமது புதிய இந்­தி­யா­வின் வலு­வான தூணாக ராமர் கோயில் உரு­வாக்­கப்­படுவதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

இதே நிகழ்ச்சியில் பார்­வதி கோயி­லுக்­கும் பிர­த­மர் அடிக்­கல் நாட்­டி­னார்.