செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
551f3bfc-0444-4f57-b38b-8b3e2d4830db
-

ராஜீவ் காந்தி பிறந்த நாள்;

மலர் தூவி ராகுல் மரியாதை

புது­டெல்லி: மறைந்த முன்­னாள் பிர­த­மர் ராஜீவ்­ காந்­தி­யின் 77வது பிறந்­த­நாள் விழாவை நேற்று நாடு முழு­வதும் காங்­கிரஸ் கட்­சி­யி­னர் கொண்­டா­டி­னர். அவ­ரது சிலை மற்­றும் படத்­துக்கு மலர்­தூவி அவர்­கள் மரி­யாதை செய்­த­னர்.

டெல்லி வீர்­பூ­மி­யில் உள்ள ராஜீவ் ­காந்தி நினை­வி­டம் நேற்று மலர்­க­ளால் அலங்­க­ரிக்­கப்­பட்டு இருந்­தது. ராஜீவ்­காந்தி நினை­வி­டத்­தில் அவ­ரது மக­னும் காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வ­ரு­மான ராகுல் காந்தி மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னார்.

காங்­கி­ரஸ் மூத்த தலை­வர்­கள் குலாம்­நபி ஆசாத், ஆதிர் ரஞ்­சன் சவுத்ரி மற்­றும் தலை­வர்­கள் பல­ரும் ராஜீவ்­ காந்தி நினை­வி­டத்­தில் மலர் ­தூவி மரி­யாதை செலுத்­தி­னார்­கள்.

பிர­த­மர் மோடி தமது டுவிட்­டர் பதி­வில், "நமது முன்னாள் பிர­த­மர் ராஜீவ் ­காந்­தி­யின் பிறந்த நாளில் அவ­ருக்கு அஞ்­சலி செலுத்­து­கி­றேன்," என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

அமித் ஷா-யோகி ஆதித்யநாத்

தேர்தல் ஆலோசனை

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். டெல்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்தில் வியாழக்கிழமை இருவரும் சந்தித்தனர். அப்போது பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவும் உடன் இருந்தார்.

மகாராஷ்டிரா லாரி

விபத்தில் 12 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

துசார்பிட் கிராமம் அருகே நாக்பூர்-மும்பை சம்ருத்தி விரைவுச்சாலை திட்டத்தில் வேலை செய்வதற்காக 15 ஊழியர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென லாரி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் 12 பேரும் பரிதாபமாக மாண்டனர்.