புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 36,571 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, வியாழக்கிழமை நிலவரமாகும். கொரோனா 2வது அலையில் பாதிப்பு களின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று நேற்று மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது. கடந்த 150 நாட்களில் இல்லாத வகையில் மிகக் குறைவாக நாடு முழுவதும் 3,63,605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.54% ஆக உள்ளது. இதற்கிடையே இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 57.22 கோடியை (சுமார் 570 மில்லியன்) கடந்துள்ளது.
கொரோனா; ஒரே நாளில் 36,571 பேர் பாதிப்பு
1 mins read
-

