தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓடும் ரயிலில் பயணித்து பயணிகளிடம் குறைகளைக் கேட்ட ரயில்ேவ அமைச்சர்

1 mins read
b2803a80-2739-4290-8570-bade123e6200
ரயில் பயணிகளிடம் உரையாடிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ். படம்: இந்திய ஊடகம் -

பாட்னா: இந்­திய ரயில்வே அமைச்­சர் அஷ்­வினி வைஷ்­ணவ் பய­ணி­கள் ரயி­லில் பய­ணம் செய்து பய­ணி­க­ளின் குறை­க­ளைக் கேட்­ட­றிந்­தார்.

ஒடிசா மாநி­லத்­தின் புவ­னேஷ்­வர்-ரய­ஹடா இடை­யி­லான பய­ணி­கள் ரயி­லில் வியா­ழக்­கி­ழமை அவர் பய­ணம் செய்­தார்.

இந்­தப் பய­ணத்­தின்­போது சக பய­ணி­க­ளி­டம் அவர் உரையாடி னார்.

ரயில் பய­ணத்­தில் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­கள் உட்­பட பல்­வேறு விவ­கா­ரங்­களில் மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் குறித்து பய­ணி­கள் வழங்­கிய ஆலோ­ச­னை­களை அமைச்­சர் கேட்டுக்கொண்டார்.

பய­ணி­க­ளு­டன் அமைச்­சர் ரயி­லில் பய­ணம் செய்து கருத்­துக்­களை கேட்­ட­து ரயில் பயணிகளை ஆச்­ச­ரி­ய­த்தில் ஆழ்த்தியுள்ளது.