பாட்னா: இந்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பயணிகள் ரயிலில் பயணம் செய்து பயணிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.
ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர்-ரயஹடா இடையிலான பயணிகள் ரயிலில் வியாழக்கிழமை அவர் பயணம் செய்தார்.
இந்தப் பயணத்தின்போது சக பயணிகளிடம் அவர் உரையாடி னார்.
ரயில் பயணத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயணிகள் வழங்கிய ஆலோசனைகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பயணிகளுடன் அமைச்சர் ரயிலில் பயணம் செய்து கருத்துக்களை கேட்டது ரயில் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.