புனே: மகாராஷ்டிராவில் வீட்டைவிட்டு ஓடிய 477 சிறுவர், சிறுமிகள் ரயில் நிலையங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டங்களில் ரயில்வே நடைேமடை பகுதிகளிலிருந்து 477 சிறுவர், சிறுமிகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாக மத்திய ரயில்வே வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இதன்படி மீட்கப்பட்டவர்களில் 310 பேர் சிறுவர்கள், 167 பேர் சிறுமிகள். அவர்கள் அரசு சாரா அமைப்புகளின் உதவியுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் தங்களது குடும்பத்தினரிடம் சண்டையிட்டுவிட்டு அவர்களிடம் எதுவும் கூறாமல் வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள்.
ரயில் நடைமேடை பகுதிகளிலும் சில நேரங்களில் ரயில்களிலும் அவர்கள் சுற்றித் திரிந்து வந்துள்ள னர்.

