இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற சண்டையில் பல வீடுகள் சேதமடைந்தன. இடிந்த வீடுகளிலிருந்து தங்களுடைய பொருட்களை குடியிருப்பாளர்கள் மீட்டு எடுத்துச் செல்கின்றனர். ஸ்ரீநகரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் இந்தச் சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அங்கிருந்த ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தனர்.
படம்: இபிஏ

