சவூதி சிறையில் அடைக்கப்பட்டவர் நாடு திரும்பினார்

சவூதி சிறையில் அடைக்கப்பட்டவர் நாடு திரும்பினார்

1 mins read
886a8b15-dd49-427b-be3e-c3a26a9e0200
பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த ஹரிஷ்ஷை (குழந்தையுடன்) அவரது மனைவி சுமனா, உறவினர்கள், நண்பர்கள் வரவேற்றனர். படம்: ஊடகம் (ஏஎன்ஐ) -

பெங்­க­ளூரு: மன்­னர் குறித்து அவ­தூ­றான கருத்­துகளை ஃபேஸ்புக்­கில் வெளி­யிட்­ட­தற்­காக சவூதி அரே­பி­யா­வில் சிறை­யில் அடைக்­கப்­பட்ட பெங்­க­ளூரு நபர் இரு­பது மாதங்­க­ளுக்­குப் பிறகு இந்­தியா திரும்­பி­யுள்­ளார்.

பெங்­க­ளூரு அனைத்­து­லக விமான நிலை­யத்­துக்கு வந்து சேர்ந்த ஹரிஷ் பெங்கெராவை அவ­ரது மனைவி சுமனா, மகள் ஹனிஷ்கா மற்­றும் நண்­பர்­கள் வர­வேற்­ற­னர். பின்­னர் அனைவரும் உடுப்­பி­யில் உள்ள குந்­தப்­பூ­ருக்­குச் சென்­ற­னர்.

ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரி­யும் அவ­ரது மனைவி சுமனா, தனது கண­வர் நாடு திரும்­பு­வ­தற்கு உத­விய அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­வித்­துக் கொண்­டார்.

தனது கண­வர் சவூதி அரே­பி­யா­வுக்கு மீண்­டும் செல்ல மாட்­டார் என்­று அவர் சொன்­னார்.

சவூதி அரே­பி­யா­வில் ஹரிஷ் ஆறு ஆண்­டு­க­ளாக வேலை பார்த்து வந்­தார்.

சவூதி அரே­பி­யா­வின் பட்­டத்து இள­வ­ர­சரை அவ­ம­திக்­கும் வகை­யில் ஃபேஸ்புக்­கில் பதி­வு­களை வெளி­யிட்­ட­தற்­காக கடந்த 2019 டிசம்­பர் 20ஆம் தேதி ஹரிஷ் கைது செய்­யப்­பட்­டார்.

ஆனால் அவர் அந்­தப் பதி­வு­களை வெளி­யி­ட­வில்லை என்பது விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ளது.

உடுப்பி போலி­சார் கடந்த ஆண்டு ஹரிஷ்­ஷின் ஃபேஸ்புக் கணக்கை ஊடு­ரு­விய இரு­வரை கைது செய்து குற்­றச்­சாட்டு பதிவு செய்­துள்­ள­னர். இந்த விசார­ணையை சுட்டிக் காட்டி ஹரிஷ்­ஷின் குடும்­பத்­தார் அவரை சிறை­யி­லி­ருந்து மீட்­டுள்­ள­னர்.