40 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது

40 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது

1 mins read
72882dda-4fe8-46ec-9521-c024e091ab28
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை பார்வைக்கு வைத்துள்ள பஞ்சாப் காவல் துறையினர். படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பஞ்சாப் மாநில காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 40.81 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது.

அனைத்துலகச் சந்தையில் அதன் மதிப்பு ரூ.200 கோடி இருக்கும் எனக் கூறப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த போதைப்பொருளை அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த நிர்மல் சிங் என்பவர் பெறவிருந்ததாகக் கூறப்பட்டது. தலைமறைவாகவுள்ள நிர்மலைக் காவல்துறை தேடி வருகிறது.

குறிப்புச் சொற்கள்