251,000 மரணங்கள் கூடுதலாகப் பதிவு

251,000 மரணங்கள் கூடுதலாகப் பதிவு

1 mins read
801108d4-0015-4a72-9964-1785a777da5d
-

பாட்னா: கொவிட்-19 தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து, அதாவது 2020 மார்ச் முதல் 2021 மே மாதம்வரை பீகார் மாநிலத்தில் குறைந்தது 251,000 மரணங்கள் கூடுதலாக பதிவாகி இருப்பதாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் பீகாரில் கிருமித்தொற்றால் 5,163 பேர் இறந்துவிட்டதாக அதிகாரபூர்வமாகக் கூறப்படும் நிலையில், அதைப்போல் 48.6 மடங்கு மரணங்கள் அந்த மாநிலத்தின் குடிமைப் பதிவு அமைப்பில் பதிவாகியுள்ளது.

தி இந்து, ஸ்குரோல், தி நியூஸ் மினிட் உள்ளிட்ட பல ஊடகங்கள் வெவ்வேறு மாநிலங்களில் இதேபோன்ற தரவுப் பகுப்பாய்வுகளை மேற்கொண்டு, மரணங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டு உள்ளதை அம்பலப்படுத்தின.

உலக அளவிலும், அதிகார பூர்வ அறிவிப்பைக் காட்டிலும் கிருமித்தொற்று மரணங்கள் இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.