அவசரப் பயன்பாட்டுக்கு அரசு அனுமதி: செப்டம்பர் மத்தியில் விநியோகம் தொடங்கும் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி

அவசரப் பயன்பாட்டுக்கு அரசு அனுமதி: செப்டம்பர் மத்தியில் விநியோகம் தொடங்கும் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி

2 mins read
6a0d1431-54a8-46cc-8b02-3900c7faf400
-

புது­டெல்லி: 12 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­கான கொரோனா தடுப்­பூசி அடுத்த மாத மத்­தி­யில் விநி­யோ­கிக்­கப்­படும் என அதன் தயா­ரிப்பு நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் 12 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்­கான முதல் தடுப்­பூ­சி­யாக 'ஸைகோவ்-டி' (ZyCoV-D) அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

குஜ­ராத் மாநி­லம், அக­ம­தா­பாத்­தில் இயங்கி வரும் ஸைடஸ் கேடிலா என்ற நிறு­வ­னம் இந்­தப் புதிய தடுப்­பூ­சியை உற்­பத்தி செய்­கிறது. முன்­ன­தாக இந்­தத் தடுப்­பூ­சி­யின் அவ­சர பயன்­பாட்­டுக்கு மத்­திய அரசு அனு­மதி வழங்­கி­யது.

இதை­ய­டுத்து 'ஸைகோவ்-டி' தடுப்­பூசி விநி­யோ­கம் எப்­போது தொடங்­கும் என அதன் தயா­ரிப்பு நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் சார்­வில் படேல் விளக்­கம் அளித்­துள்­ளார்.

தடுப்­பூ­சி­யின் விநி­யோக முறை, விலை நிர்­ண­யம் தொடர்­பாக மருந்து ஒழுங்­கு­முறை அதி­கா­ரி­க­ளு­டன் விவா­திக்க இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், அடுத்த மாத மத்­தி­யில் இருந்து இறு­திக்­குள் விநி­யோ­கத்தை தொடங்­கி­விட முடி­யும் என்று நம்­பு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"எதிர்­வ­ரும் அக்­டோ­பர் மாதத்­துக்­குள் பத்து மில்­லி­யன் தடுப்­பூ­சியை உற்­பத்தி செய்ய வேண்­டும் என இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

"ஜன­வரி இறு­திக்­குள் நாற்­பது முதல் ஐம்­பது மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை உற்­பத்தி செய்­வோம் என்ற நம்­பிக்கை உள்­ளது," என்­றார் சார்­வில் படேல்.

மூன்­றா­வது ஊசி தேவையா?

இதற்­கி­டையே இரு தவணை கொரோனா தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­க­ளுக்கு மூன்­றா­வ­தாக பூஸ்­டர் ஊசி போட வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கிறது.

இது­கு­றித்து கருத்து தெரி­வித்த டெல்லி எய்ம்ஸ் மருத்­து­வ­மனை இயக்­கு­ந­ரான மருத்­து­வர் ரன்­தீப் குலே­ரியா, இந்­தி­யா­வி­டம் இது தொடர்­பாக போது­மான தர­வு­கள் இல்லை என்­றார். தர­வு­கள் கிடைத்த பின்­னர் அடுத்த ஆண்டு தொடக்­கத்­தில் மூன்­றா­வது ஊசி குறித்து முடி­வெ­டுக்­கப்­படும் என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

இந்­திய நில­வ­ரம்:

இதற்­கி­டையே நேற்று முன்­தி­னம் நாடு முழு­வ­தும் புதி­தாக மேலும் 30,948 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறு­தி­யாகி உள்­ளது. ஒரே நாளில் 403 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். இத­னால், உயி­ரி­ழந்­தோர் மொத்த எண்­ணிக்கை 434,367ஆக கூடி­யுள்­ளது.

தற்­போது கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 353,398 பேருக்கு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது. குண­ம­டைந்­தோர் விகி­தம் 97.57%ஆக அதி­க­ரித்த நிலை­யில், உயி­ரி­ழப்­போர் விகி­தம் 1.34%ஆக குறைந்­துள்­ளது.

கேரளா நில­வ­ரம்

அண்­மைய சில தினங்­க­ளாக கேர­ளா­வில் தொடர்ந்து ஏறு­மு­க­மாக இருந்த அன்­றாட பாதிப்பு நேற்று முன்­தி­னம் சற்றே குறைந்­தது. அன்று புதி­தாக 17,106 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறு­தி­யா­னது.

ஐந்து நாள்­க­ளுக்­குப் பிறகு புதி­தாக பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை 20 ஆயி­ரத்­துக்­கும் குறை­வா­கப் பதி­வா­னது.

ஓணம் பண்­டிகை வேளை­யில் இது அம்­மா­நில மக்­க­ளுக்கு சற்றே ஆறு­தல் அளித்­துள்­ளது.

டெல்லி நில­வ­ரம்

டெல்­லி­யில் தற்­போது இரட்டை இலக்­கங்­க­ளில்­தான் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின்­றன. நேற்று முன்­தி­னம் 19 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றிய நிலை­யில், அங்கு கடை­கள் இயங்க விதிக்­கப்­பட்­டி­ருந்த நேரக்­கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டன.

உண­வ­கங்­கள், வணிக வளா­கங்­கள் உள்­பட அனைத்­துக் கடை­க­ளை­யும் இரவு பத்து மணிக்கு மேலாக திறந்து வைக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.