ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் நின்றதால் இந்தியாவில் உலர்ந்த பழங்களின் விலைகள் மும்மடங்காகின

ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் நின்றதால் இந்தியாவில் உலர்ந்த பழங்களின் விலைகள் மும்மடங்காகின

1 mins read
fa5345b7-e330-4775-b32e-c38207405180
டெல்லியில் மொத்த விற்பனை காய்கறிச் சந்தையில் காணப்படும் மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ் -

தலிபான் படையினர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகம் நின்றுபோனது. அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் வருடாந்திர மதிப்பு ஏறக்குறைய $2 பில்லியன்.

ஆப்கானிஸ்தானுடைய முக்கிய வர்த்தகப் பங்காளியான இந்தியா, தான் இறக்குமதி செய்யும் உலர்ந்த பழங்களில் 85 விழுக்காட்டை ஆப்கானிஸ்தானிலிருந்து தருவிக்கிறது. அதுபோக, அத்தியாவசிய பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

கடந்த ஆண்டு அத்திப்பழம், வால்நட், பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை உள்ளிட்டவை அடங்கிய இறக்குமதிகளின் மொத்த மதிப்பு US$509 மில்லியன் (S$689 மி.)

இந்தியா, கிட்டத்தட்ட 70 விழுக்காடு அளவு பெருங்காயத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் இந்தியாவில் உலர்ந்த பழங்களின் விலைகள் கடந்த வாரம் மும்மடங்காகின.

குறிப்புச் சொற்கள்