தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்பி, எம்எல்ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க காலக்கெடு

1 mins read
9815b4b7-3684-4472-864b-1d09d8262e01
-

புது­டெல்லி: நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மீதான நிதி­மோ­சடி, குற்றவியல் வழக்கு விசா­ர­ணை­களை விரை­வு­ப­டுத்­தக் கோரி வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அந்த விசா­ர­ணை­யில் உச்­ச­நீ­தி­மன்­றத்­திற்கு உதவ மூத்த வழக்­க­றி­ஞர் விஜய் அன்­சா­ரியா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்த வழக்கு உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி என்.வி.ரமணா தலை­மை­யி­லான அமர்­வில் நேற்று முன்­தி­னம் விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது, அன்­சா­ரியா தாக்­கல் செய்த அறிக்­கை­யில், "எம்பி.க்கள் 51 பேர் மற்­றும் எம்­எல்ஏ.க்கள் உட்­பட 112 பேர் மீதான நிதி மோசடி வழக்­கு­களை அம­லாக்­கத் துறை­யும், 121 முன்­னாள், இன்­னாள் நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மீதான குற்­ற­வி­யல் குற்­றச்­சாட்­டு­களை சிபிஐ.யும் விசா­ரிக்­கின்­றன. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மீதான நிதி மோசடி குறித்த 28 வழக்கு விசா­ர­ணை­கள் நிலு­வை­யில் உள்­ளன. அவற்­றில் 10 வழக்­கு­கள் நீதி­மன்­றத்­தில் குற்­றச்­சாட்டு பதிவு செய்­யும் நிலை­யில் உள்­ளன. இந்த வழக்­கு­களை குறிப்­பிட்ட காலக்­கெடு நிர்­ண­யித்து விசா­ர­ணையைத் துரி­தப்­ப­டுத்­த­லாம்," என கூறப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்­கு­க­ளின் விசா­ர­ணையைத் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும். வழக்­கு­கள் நிலு­வைக்­கான கார­ணம் ஆரா­யப்­படும் என்றும் கூறிய தலைமை நீதிபதி ரமணா, இந்­த சுணக்­கம் நீதி­மன்­றத்­தாலா அல்­லது வழக்­கில் தொடர்­புள்­ள­வர்­கள் ஏற்­ப­டுத்­துவதா என்­பது குறித்து ஆய்வு செய்­யப்­படும் என்றும் கூறி­யுள்­ளார்.