மகாராஷ்டிர முதல்வரை அறைவேன் என்று பேசிய மத்திய அமைச்சர் போலிசில் முன்னிலையாக உத்தரவு

மகாராஷ்டிர முதல்வரை அறைவேன் என்று பேசிய மத்திய அமைச்சர் போலிசில் முன்னிலையாக உத்தரவு

2 mins read
ab87e9bf-a9ba-4a1a-80ca-b657c39d248b
-

மும்பை: மகா­ராஷ்­டிர முதல்­வ­ரும், சிவ­சேனா கட்­சித் தலை­வ­ரு­மான உத்­தவ் தாக்­கரே குறித்து மத்­திய அமைச்­சர் நாரா­யண் ரானே (படம்) சர்ச்­சைக்­கு­ரிய வகை­யில் ஒரு பொதுக்­கூட்­டத்­தில் பேசி­யி­ருந்­தார்.

பா.ஜ.க. சார்­பில் ராய்­காட்­டில் நடந்த பேர­ணி­யில் அவர் பேசும்­போது, "ஒரு மாநி­லத்­தின் முதல் அமைச்­ச­ருக்கு (உத்­தவ் தாக்­கரே) எந்த ஆண்டு நாடு சுதந்­தி­ரம் பெற்­றது என்­ப­து­கூட தெரி­யா­மல் இருப்­பது வெட்­கக்கேடான வி‌ஷ­யம்.

அவர் சுதந்­திர தின விழா­வில் உரை­யாற்­றும்­போது, நாடு சுதந்­தி­ரம் அடைந்த ஆண்டு எது என்று உத­வி­யா­ள­ரி­டம் கேட்­டார். அந்த இடத்­தில் நான் இருந்­தால் அவ­ருக்குப் பல­மான அறை கொடுத்­தி­ருப்­பேன்," என்­றார்.

அவ­ரது பேச்­சுக்கு சிவ­சேனா கட்­சி­யி­னர் கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.

இதைத் தொடர்ந்து மத்­திய அமைச்­சர் நாரா­யண் ரானே மீது சிவ­சேனா கட்சி, நாசிக் நகர போலி­சில் புகார் அளித்­தது. இதன் பேரில் அவர் போலிசாரால் கைது செய்­யப்­பட்டு பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். அதோடு வரு­கிற 30 மற்­றும் செப்­டம்­பர் 13ஆம் தேதி­களில் ராய்­காட் மாவட்ட போலிஸ் கண்­கா­ணிப்பு அலு­வ­ல­கத்­தில் முன்­னி­லை­யாக வேண்­டும் என்­றும் நீதி­மன்­றம் உத்­த­ரவு பிறப்பித்தது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக மாநி­லத்­தின் பல்­வேறு இடங்­களில் பாஜக - சிவ­சேனா தொண்­டர்­களுக்கு இடையே மோதல் ஏற்­பட்­டது.

இந்த நிலை­யில் பிணை­யில் விடு­த­லை­யான நாரா­யண் ரானே, செப்­டம்­பர் 2ஆம் தேதி 12 மணி­ய­ள­வில் நாசிக் போலிஸ் நிலை­யத்­தில் முன்­னி­லை­யாக வேண்­டும் என்று காவல்­துறை அவ­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

மத்­திய குறு, சிறு, நடுத்­தர தொழில் துறை அமைச்­ச­ராக நாரா­யண் ரானே பொறுப்பு வகித்து வரு­கி­றார்.