செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
377f6f20-a522-412e-801d-a9b252014961
-

பாலி­யல் வன்­கொ­டுமை: முன்­னாள் எம்­எல்­ஏ­வுக்கு 25 ஆண்டு சிறை

ஷில்­லாங்: மேகா­லயா மாநி­லத்­தில் தேசிய பழங்­கு­டி­யி­னர் விடு­த­லைக் கழ­கம் என்ற அர­சி­யல் அமைப்பை நடத்தி வரு­ப­வர் ஜூலி­யஸ் டார்­பாங். இவர் மீது 2007ஆம் ஆண்டு சிறுமி ஒரு­வர் பாலி­யல் வன்­கொ­டுமை புகார் கொடுத்­தார். இதன் அடிப்­ப­டை­யில் வழக்­குப்­ப­திவு செய்து ஜூலி­யஸ் டார்­பாங்கை கைது செய்­த­னர். இந்த வழக்கு மேகா­லயா நீதி­மன்­றத்­தில் விசா­ரிக்­கப்­பட்டு வந்­தது. இதை விசா­ரித்த சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி எப்.எஸ்.சங்மா, குற்­ற­வாளி ஜூலி­யஸ் டார்­பாங்­குக்கு 25 ஆண்டு சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்பு கூறி­னார். இவர் மீது பாலி­யல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்­கப்­பட்ட பிறகு நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் ஜூலி­யஸ் டார்­பாங் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்­றது குறிப்­பி­டத்­தக்­கது.

கர்­நா­டகா: 2022 டிசம்­பர் வரை

வீட்­டி­லி­ருந்து வேலை

பெங்­க­ளூரு: கொரோனா தொற்று நெருக்­கடி கார­ண­மாக கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக கர்­நா­டக மாநி­லத்­தின் தக­வல் தொழில்­நுட்ப மற்­றும் உயிரி தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் தங்­க­ளது ஊழி­யர்­களை வீட்­டில் இருந்­த­வாறு பணி­யாற்ற அனு­ம­தித்­துள்­ளன. தொற்று மூன்­றா­வது அலையை எதிர்­கொள்­வது குறித்து நிறு­வ­னங்­க­ளுக்கு வழி­காட்­டு­தல்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. 60 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் 50 விழுக்­காட்­டுக்­கும் குறை­வான ஊழி­யர்­க­ளைக் கொண்டு இயங்­கு­கின்­றன. இந்த நிலை­யில் நிறு­வ­னங்­கள் தங்­க­ளது ஊழி­யர்­களை வரும் 2022ம் ஆண்டு டிசம்­பர் வரை வீட்­டில் இருந்­த­வாறு பணி­யாற்ற அனு­ம­திக்க வேண்­டும் என அரசு சார்­பில் நிறு­வ­னங்­க­ளுக்கு கடி­தம் அனுப்­ப­‌ப்­பட்­டுள்­ளது. இந்த அறி­வு­றுத்­தலை 50 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆப்­கா­னில் இருந்து டெல்லி

வந்­தி­றங்­கிய 16 பேருக்கு தொற்று

புது­டெல்லி: ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து டெல்லி வந்த 78 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. ஆப்­கா­னில் இருந்து நூற்­றுக்­க­ணக்­கான இந்­தி­யர்­கள் மீட்­கப்­பட்டு தாய­கம் அழைத்து வரப்­பட்­டுள்­ள­னர்.

காபூ­லில் சிக்­கி­யி­ருந்த 25 இந்­தி­யர்­கள் மற்­றும் ஆப்­கா­னிஸ்­தா­னைச் சேர்ந்த இந்­துக்­கள், சீக்­கி­யர்­கள் என 78 பேரை மீட்டு, இந்­திய விமா­னப் படை­யைச் சேர்ந்த விமா­னத்­தில் கடந்த திங்­கட்­கி­ழமை தஜகிஸ்­தா­னின் துஷான்பே நக­ரத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்டு அங்­கி­ருந்து ஏர் இந்­தியா விமா­னத்­தில் நேற்று டெல்­லிக்கு அழைத்து வரப்­பட்­ட­னர். இந்­நி­லை­யில், 78 பேரில் 16 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­கள் அனை­வ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். விமா­னத்­தில் வந்த மற்­ற­வர்­களும் 14 நாட்­கள் தங்­களை கண்­கா­ணிப்­பில் வைத்­துக்­கொள்­ளும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

இது­வரை இந்­தியா 228 இந்­தி­யர்­கள் உட்­பட 626 பேரை காபூ­லில் இருந்து மீட்டு வந்­துள்­ள­தாக மத்­திய அமைச்­சர் ஹர்­தீப் பூரி தெரி­வித்­துள்­ளார். இந்­நி­லை­யில் ஆப்­கா­னிஸ்­தான் நாட்டு மக்­கள் இ-விசா மூலம் மட்­டுமே இந்­தி­யா­வுக்கு வரமுடியும் என்று மத்­திய உள்­துறை அமைச்­ச­கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

மேக­தாது அணை விவ­கா­ரம்:

கர்­நா­டக முதல்­வர் டெல்லி பய­ணம்

பெங்­க­ளூரு: மேக­தாது அணை தொடர்­பாக, மத்­திய நீர்­வளத்­துறை அமைச்­சர் கஜேந்­திர சிங் ஷெகா­வத்தை சந்திக்க கர்­நா­டக முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை நேற்று டெல்லி புறப்­பட்­டுச் சென்­றார். கர்­நா­ட­கா­வில் மேக­தாது என்ற இடத்­தில் காவிரி நதி­யின் குறுக்கே அணை கட்ட கர்­நா­டகா முயற்­சி செய்கிறது. அதற்குத் தமி­ழக அரசு கடும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கிறது. மத்­திய அர­சும் எதிர்ப்பு தெரி­விக்­கிறது. டெல்­லி­யில் அவர், மேலும் மாநில அமைச்­ச­ரவை விரி­வாக்­கம் தொடர்­பா­க­வும் பாஜக தலை­வர்­க­ளி­டம் ஆலோசனை நடத்தலாம் எனக் கூறப்­ப­டு­கிறது.