சிறையில் வசதி: சசி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சிறையில் வசதி: சசி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

1 mins read
8f8e761c-0174-46d9-9ea4-da7dd9f6c6ed
-
Google News Preferred Icon

சென்னை: பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, பல்வேறு சிறப்பு வசதிகளைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா நடராஜன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சிறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்பது சசிகலா மீதான குற்றச்சாட்டு.

இதன் மூலம் சிறையில் பெரிய அறை, தொலைக்காட்சி, கைபேசி உள்ளிட்ட வசதிகளை அவர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறைத்துறை உயரதிகாரி ரூபா பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.

இதுதொடர்பாக பெங்களூரு ஊழல் தடுப்புப் படை போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வந்தனர்.

எனினும் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கில் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.