தளபதி ராவத்: சவால்களை எதிர்கொள்ளத் தயார்

தளபதி ராவத்: சவால்களை எதிர்கொள்ளத் தயார்

1 mins read
1fa1f97d-09ea-4aba-ae02-f624873d8ee9
-

புது­டெல்லி: எத்­த­கைய தீவி­ர­வாத சவால்­க­ளை­யும் எதிர்­கொள்ள இந்­திய ராணு­வத்­தின் முப்­ப­டை­களும் தயார் நிலை­யில் இருப்­ப­தாக முப்­படை­க­ளின் தலை­மைத் தள­பதி பிபின் ராவத் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் நிகழ்ச்சி ஓன்­றில் பேசிய அவர், ஆப்­கா­னிஸ்­தானை தலி­பான் படை­கள் இவ்­வ­ளவு விரை­வா­கக் கைப்­பற்­றும் என எதிர்­பார்க்­க­வில்லை என்­றார்.

தலி­பான்­கள் ஆப்­கானை முழு­மை­யாக தங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வர இரண்டு மாதங்­க­ளா­வது ஆகும் என கரு­தி­ய­தா­க­வும் இப்­போ­துள்ள நிலைமை இந்­தி­யா­வுக்கு கவலை அளித்­துள்­ளது என்­றும் பிபின் ராவத் கூறி­னார்.

"ஆப்­கா­னிஸ்­தா­னில் ஊடு­ரு­வி­யுள்ள பயங்­க­ர­வாத அமைப்­பு­கள் இந்­தி­யா­வில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா என்ற கவலை மத்­திய அர­சுக்கு உள்­ளது. பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக இந்­தியா பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது. அதே­போல ஆப்­கா­னிஸ்­தான் விவ­கா­ரத்­தி­லும் செயல்­ப­டு­வோம். நமது பாது­காப்பு தொடர்­பில் அங்­கி­ருந்து வரும் எத்­த­கைய சவால்­க­ளை­யும் சமா­ளிக்கத் தயா­ராக உள்­ளோம்," என்று முப்­படை­க­ளின் தள­பதி பிபின் ராவத் சூளு­ரைத்­தார்.

பயங்­க­ர­வா­தி­களை அடை­யா­ளம் காண்­பது தொடர்­பான உளவு தக­வல்­களை இந்­தியா, அமெ­ரிக்கா, ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­கள் பரி­மா­றிக் கொள்ள வேண்­டும் என்றும் அவர் கூறினார்.