பிணை ரத்தானால் சிறை: முதல்வர் ஜெகன்மோகனுக்கு கடும் நெருக்கடி

பிணை ரத்தானால் சிறை: முதல்வர் ஜெகன்மோகனுக்கு கடும் நெருக்கடி

2 mins read
f7fcb766-5569-4bcd-b78d-39752d2863f4
ஜெகன்மோகன். படம்: ஊடகம் -

அம­ரா­வதி: சொத்­துக்­கு­விப்பு வழக்­கில் பிணை கிடைக்­கா­விட்­டால் ஆந்­திர முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி சிறைக்­குச் செல்ல வேண்­டிய நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து அவ­ருக்கு அடுத்த­ப­டி­யாக ஆந்­திர முதல்­வ­ராக பொறுப்­பேற்­கப் போவது யார் என்ற கேள்­வி­யும் எழுந்­துள்­ளது.

கடந்த பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஜெகன்­மோ­கன் ரெட்டி, அவ­ரது ஒய்­எஸ்­ஆர் காங்­கி­ரஸ் கட்­சி­யின் எம்­பி­யான விஜய்­சாய் ரெட்டி ஆகிய இரு­வர் மீதும் சொத்­துக்­குவிப்பு வழக்கு பதிவு செய்­யப்­பட்­டது. பின்­னர் அந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இந்த வழக்­கில் ஜெகன்­மோகன் ரெட்டி முதல் குற்­ற­வா­ளி­யாக குற்றம்­சாட்­டப்­பட்­டுள்­ளார். 2010ஆம் ஆண்டு தொடுக்­கப்­பட்ட இந்த வழக்­கின் விசா­ரணை கடந்த பத்து ஆண்­டு­க­ளாக ஹைத­ரா­பாத்­தில் உள்ள சிபிஐ நீதி­மன்­றத்­தில் நடை­பெற்று வரு­கிறது. குற்­றம்­சாட்­டப்­பட்ட இரு­வ­ரும் பிணை பெற்­றுள்­ள­னர்.

இதற்­கி­டையே, கடந்த தேர்­த­லில் வெற்­றி­பெற்று ஆந்­திர முதல்­வ­ரா­கப் பதவி வகித்து வரு­கி­றார் ஜெகன்­மோ­கன்.

இந்­நி­லை­யில் குற்­றம்­சாட்­டப்­பட்ட இரு­வ­ரது பிணை­யை­யும் ரத்து செய்ய வலி­யு­றுத்தி ஜெகன்­மோ­க­னின் கட்­சியைச் சேர்ந்த ரகு­ராம் கிருஷ்­ணம்ம ராஜு என்­ப­வர் சிபிஐ நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­தார்.

கட்­சித் தலை­மை­யு­டன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக அவர் பழி­வாங்­கும் அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வ­தாக ஜெகன்­மோ­க­னின் ஆத­ர­வா­ளர்­கள் சாடி­யுள்­ள­னர்.

ஜெகன்­மோ­கன், விஜய்­சாய் ஆகிய இரு­வ­ரும் பிணை நிபந்­தனை­களை மீறு­கின்­ற­னர் என்றும் சாட்­சி­களைக் கலைக்க முயற்­சிக்­கின்­ற­னர் என்றும் ­தமது மனு­வில் குறிப்­பிட்­டுள்­ளார் ரகு­ராம்.

இந்த வழக்­கில் செப்­டம்­பர் 15ஆம் தேதி தீர்ப்பு அளிக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு­வேளை தீர்ப்பு ஜெகன்­மோ­க­னுக்கு எதி­ராக அமைந்­தால் அவர் சிறைக்­குச் செல்ல வேண்­டி­யி­ருக்­கும். இதை­ய­டுத்து ஆந்­தி­ரா­வின் அடுத்த முதல்­வர் யார் எனும் கேள்வி எழுந்­துள்­ளது. ஜெகன்­மோ­கன் மனைவி பார்­வ­தியை ஒரு தரப்­பி­னர் முன்­னி­றுத்தி வரு­கின்­ற­னர். மூத்த தலை­வர்­கள் சில­ரது பெயர்­களும் அடி­ப­டு­கின்­றன.

இதற்­கி­டையே, இந்த வழக்­கின் தீர்ப்பு தொடர்­பாக ஆந்­திரா முழு­வ­தும் சூதாட்­டம் நடை­பெ­று­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இந்த சூதாட்­டத்­தில் கோடிக்­க­ணக்­கில் பணப் பரி­மாற்­றம் நடப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.