ஆப்கானிஸ்தானில் இந்திய விசாக்கள் திருடப்பட்டன

11,000 விசாக்கள் செல்லாதென அறிவிப்பு; குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம்

புது­டெல்லி: ஆப்­கா­னிஸ்­தா­னில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கம் வழங்­கிய 11 ஆயி­ரம் விசாக்­கள் செல்­லு­ப­டி­யா­காது என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக, ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் தேதி வரை வழங்­கப்­பட்ட விசாக்­கள் தொடர்­பாக இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக தூத­ரக அதி­காரி தெரி­வித்­தார் என ஏஎன்ஐ செய்தி முகமை கூறி­யுள்­ளது.

முன்­ன­தாக இந்­திய தூத­ர­கம் வழங்­கிய சுமார் ஆயி­ரம் விசாக்­கள் திரு­டு­போ­ன­தா­க­வும் அதன் பிற­கு­தான் ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து இந்­தி­யா­வுக்கு வரு­ப­வர்­க­ளுக்கு 'இ-விசா' எனப்­படும் மின்­னி­லக்க விசா பெறு­வது கட்­டா­யம் என்ற அறி­விப்பு வெளி­யா­ன­தா­க­வும் அந்­தச் செய்­தி­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தலி­பான்­க­ளின் கட்­டுப்­பாட்­டுக்­குள் ஆப்­கா­னிஸ்­தான் வரு­வ­தற்கு முன்­னர் இந்­திய தூத­ர­கம் மூன்று தினங்­களில் சுமார் 11 ஆயி­ரம் விசாக்­களை அளித்­தி­ருந்­தது.

இது­வரை ஆப்­கான் குடி­மக்­க­ளுக்கு முந்­நூ­றுக்­கும் மேற்­பட்ட 'இ-விசா'க்கள் அளிக்­கப்­பட்­டுள்­ளது. திரு­டு­போன விசாக்­கள் முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என இந்­திய உள­வுப் பிரி­வு­கள் எச்­ச­ரித்­ததை அடுத்து உள்­துறை அமைச்சு நட­வ­டிக்­கை எடுத்­துள்­ளது. தலி­பான்­கள் காபூல் நக­ரைக் கைப்­பற்ற முன்­னேறி வரு­வ­தாக தக­வல் வெளி­யா­னதை அடுத்து, இந்­திய விசா­வுக்­காக விண்­ணப்­பித்த ஆப்­கா­னிஸ்­தான் குடி­மக்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தது. இந்­நி­லை­யில், ஆப்­கா­னிஸ்­தா­னில் இந்­தியா மேற்­கொண்ட பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளுக்கு துணை நின்­ற­வர்­க­ளுக்­கும் தலி­பான்­க­ளால் அச்­சு­றுத்­த­லுக்கு ஆளா­கக் கூடி­ய­வர்­க­ளுக்­கும் விசா அளிப்­ப­தில் முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என இந்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

ஆப்­கா­னிஸ்­தா­னில் நிலைமை மோச­மாகி வரும் இவ்­வே­ளை­யில் அங்­குள்ள இந்­தி­யர்­களை மீட்­ப­தற்­குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார். இந்­தி­யர்­களை மீட்­பதே அர­சின் முதன்மை பணி­யாக இருக்­கும் என்­றார் அவர்.

டெல்­லி­யில் நடை­பெற்ற அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில் பேசிய அமைச்­சர் ஜெய்­சங்­கர், ஆப்­கன் விவ­கா­ரத்­தில் இந்­தி­யா­வின் முன்­னு­ரி­மை­கள் குறித்து விளக்­கம் அளித்­தார்.

அந்­நாட்டு மக்­க­ளுக்கு இயன்ற உத­வி­கள் அனைத்­தை­யும் செய்ய வேண்­டும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

காபூல் விமான நிலைய பகு­தி­யில் நிகழ்ந்த குண்­டு­வெ­டிப்­புக்கு இந்­தியா கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!