மும்பை: மகாராஷ்டிராவில் தொற்றுப் பாதிப்பு மெல்ல கட்டுக்குள் வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் மும்பையில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்களுக்கு கிருமி தொற்றியுள்ளது.
மும்பை டோங்கிரி பகுதியில் உள்ள அந்த உறைவிட பள்ளியில் தொற்றுக்கான அறிகுறி கள் தென்பட்டதையடுத்து, அனைத்து மாணவர்க ளுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 22 பேருக்கு தொற்றுப் பாதிப்பு இருப்பது உறுதியானது.
கிருமி தொற்றிய அனைவரும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று முன்தினம் புதிதாக மேலும் 1,213 பேரை கிருமி தொற்றி உள்ளது.

