இறுதிக்கட்ட மீட்புப் பணிகள் தீவிரம்

இறுதிக்கட்ட மீட்புப் பணிகள் தீவிரம்

2 mins read
20a41816-1bc9-4ec8-b5bf-335139b41353
காபூலின் ஹமீத் கர்சாய் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையை மறித்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருக்கும் தலிபான் படையினர். படம்: இபிஏ -

காபூல்: ஆப்­கா­னிஸ்­தான் தலை­நகர் காபூ­லில் இருந்து மக்­களை வெளி­யேற்­றும் பணி­களில் இறு­திக்­கட்­டத்தை நெருங்­கி­விட்­ட­தாக பிரிட்­டிஷ் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

"எல்­லா­ரை­யும் மீட்டு, வெளி­யேற்ற இய­ல­வில்லை என்­பதை ஆழ்ந்த வருத்­தத்­து­டன் தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்," என்று பிரிட்­டிஷ் தற்­காப்பு அமைச்­சர் பென் வாலஸ் கூறி­னார்.

காபூல் விமான நிலை­யத்­திற்கு வெளியே பேரன் ஹோட்­ட­லில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த வெளி­யேற்­றச் செயல்­பாட்டு வச­தி­கள் மூடப்­பட்டு­விட்­டன.

அந்த விமான நிலை­யத்­தைக் கட்­டுப்­பாட்­டில் வைத்­துள்ள அமெ­ரிக்கா, இம்­மா­தம் 31ஆம் தேதி­யுடன் அங்­கி­ருந்து தனது படை­களை மீட்­டுக்­கொள்ள இருக்­கிறது.

அவ்விமான நிலை­யத்­திற்கு வெளியே நேற்று முன்­தி­னம் ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்பு நடத்­திய வெடி­குண்­டுத் தாக்­கு­த­லில் பலர் கொல்­லப்­பட்­ட­னர்; நூற்­றுக்கு மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர்.

அதைத் தொடர்ந்து, ஸ்பெ­யின், ஆஸ்­தி­ரே­லியா, நார்வே உள்­ளிட்ட நாடு­கள் அங்­கி­ருந்து மக்­களை மீட்டு, வெளி­யேற்­றும் பணி­களை நிறுத்­திக்­கொள்­வ­தாக அறி­வித்­தன.

இந்­நி­லை­யில், விமான நிலை­யத்­தில் எஞ்­சி­யுள்ள கிட்­டத்­தட்ட 1,000 பேரை மீட்க எட்டு, ஒன்­பது விமா­னங்­கள் இயக்­கப்­படும் என்று திரு வாலஸ் கூறினார்.

ஆனா­லும், 100 முதல் 150 பிரிட்­டிஷ் குடி­மக்­கள் ஆப்­கா­னிஸ்­தானி­லேயே விட்­டு­வி­டப்­ப­டு­வ­தா­க­வும் அவர்­களில் சிலர் அங்­கேயே இருக்க விருப்­பம் தெரி­வித்­துள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

ஆப்­கா­னில் இருக்­கும் கடைசி பிரிட்­டிஷ் படை­கள் எப்­போது அங்­கி­ருந்து கிளம்­பும் என்­பதை உறுதி­யா­கக் கூற முடி­யாது என்ற அவர், இருப்­பி­னும் 31ஆம் தேதி அமெ­ரிக்கா தனது படை­களை மீட்­டுக்­கொள்­ளு­முன் அது இடம்­பெ­றும் என்று சொன்னார்.

சிங்கப்பூர் கண்டனம்

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று முன்தினம் நடத்தப்பட்ட, வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. "இந்த வன்முறைச் செயல்கள் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை. அவற்றுக்கு நியாயம் கற்பிக்க முடியாது," என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கை வாயிலாகக் கூறி இருக்கிறது. தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலையும் காயமுற்றோர் விரைந்து குணமடைய வாழ்த்துகளையும் சிங்கப்பூர் தெரிவித்துக்கொண்டுள்ளது. இதனிடையே, ஆப்கானில் இருந்து வெளியேற விரும்புவோரை மீட்க உதவும் வகையில், 37 டன்னுக்குமேல் எடை தாங்கவல்ல, சிங்கப்பூர் விமானப் படையின் ஏ330 'டேங்கர்' விமானம், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் கத்தாருக்குப் புறப்பட்டுச் சென்றது.