உண்ண உணவும் இருக்க இடமுமின்றி கையேந்தும் நிலையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள்

உண்ண உணவும் இருக்க இடமுமின்றி கையேந்தும் நிலையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள்

2 mins read
2f462705-171c-4d7f-867a-ffb332ef4ace
-

காபூல்: உள்­நாட்­டுப் போரால் சீர­ழிந்த ஆப்­கா­னிஸ்தான், இப்­போது பெரும் மனி­தா­பி­மான நெருக்­கடியை எதிர்­கொண்டு வரு­கிறது.

இம்­மா­தம் 15ஆம் தேதி ஆப்­கா­னிஸ்­தான் தலி­பான் படை­யி­னர் வச­மா­னது. ஆப்­கா­னில் இருந்து அமெ­ரிக்­கப் படை­யி­னர் விலக்­கிக் கொள்­ளப்­பட்ட நிலை­யில், அந்­நாடு விரை­வில் தலி­பான் பிடிக்­குள் சிக்­கி­யது.

அதன் கார­ண­மாக தங்­க­ளது வீடு­க­ளை­விட்டு வெளி­யேற நேர்ந்த பல நூறு குடும்­பங்­கள் தற்­போது கொளுத்­தும் வெயி­லில் காபூல் பூங்­கா­வில் அடைக்­க­லம் புகுந்­துள்­ளன. அவர்­கள் உண்ண உண­வும் வசிக்க இட­மும் இன்றி கையேந்­தும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஒரு­பக்­கம், ஆப்­கா­னை­விட்டு வெளி­யே­றும் முயற்­சி­யில் ஆயி­ரக்­கணக்­கா­னோர் காபூல் விமான நிலை­யத்­தில் திரண்­டுள்­ள­னர். இன்­னொரு பக்­கம், பூங்­கா­வில் தஞ்­சமடைந்­துள்­ளோ­ரைப் போன்ற குடும்­பங்­கள் வீடு­க­ளுக்­குத் திரும்­பு­வதா அல்­லது இப்­போ­தி­ருக்­கும் இடத்­தி­லேயே இருப்­பதா எனச் செய்­வது அறி­யா­மல் விழி­பி­துங்கி நிற்­கின்­ற­ன.

"மோச­மான நிலை­யில் இருக்­கி­றேன். என் வயிற்­றில் எது­வு­மே இல்லை," எனப் புலம்­பி­னார் தனது பெரிய குடும்­பத்­து­டன் காபூல் பூங்­கா­வில் தஞ்­ச­ம­டைந்­து இருக்கும் இல்­லத்­த­ரசி ஸாகிதா பீபி.

ஆப்­கான் படை­யி­னர்க்­கும் தலி­பான்­க­ளுக்­கும் இடை­யி­லான போரில் தமது வீடு தீக்­கி­ரை­யா­கி­விட்­ட­தால் குடும்­பத்­து­டன் காபூ­ல் நகருக்குத் தப்பி வந்­த­தா­கக் கூறி­னார் வடக்கு ஆப்­கா­னிஸ்­தா­னைச் சேர்ந்த திரு பல்­வான் சமீர்.

பூங்­கா­வி­லும் விமான நிலை­யத்­தி­லும் இருப்­ப­வர்­க­ளுக்கு உணவு வழங்­கு­வ­தில்லை என்­றும் அப்­ப­டிச் செய்­வது மேலும் கூட்­டம் சேர்ப்­ப­தாக அமை­யும் என்­றும் தலி­பான் பேச்­சா­ளர் சொன்­ன­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி தெரி­வித்­தது.

அவர்­கள் தங்­க­ளது வீடு­க­ளுக்­குத் திரும்ப வேண்­டும் என்­றும் அப்பேச்­சா­ளர் வலியுறுத்தினார்.

தனது உறுப்­பி­னர்­களை அமைச்­சு­களில் நிய­மித்­துள்ள தலி­பான், அதி­கா­ரி­க­ளைப் பணிக்­குத் திரும்­ப­வும் உத்­த­ர­விட்­டுள்­ளது. ஆனால், சேவை­கள் இன்­னும் தொடங்­க­வில்லை; வங்­கி­கள் மூடப்­பட்­டு உள்­ளன.

இந்­நி­லை­யில், ஆப்­கா­னில் தன்­வசம் இன்­னும் ஒரு வாரத்­திற்­குப் போது­மான மருந்­துப்­பொ­ருள்­களே இருப்­ப­தாக உலக சுகா­தார நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. காபூல் விமான நிலை­யத்­தில் நில­வும் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக விநி­யோ­கம் தடை­பட்­டுள்­ள­தா­கக் கூறிய அந்த அமைப்பு, அந்­நாட்­டில் உணவு உத­விக்கு உட­ன­டி­யாக 200 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் தேவைப்­படு­வ­தா­க­வும் கூறி­யது.