யங்கூன்: மியன்மார் நாட்டின் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று அந்நாட்டின் இராணுவ அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டில் இராணுவ நடவடிக்கையின்போது பல நூறாயிரம் ரோஹிங்யா மக்கள் மியன்மாரில் இருந்து தப்பி, பங்ளாதேஷில் தஞ்சம் புகுந்தனர். மியன்மாரிலேயே இருக்கும் ரோஹிங்யா இனத்தவரும், தாங்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகவும் தங்களைக் குடிமக்களாகவே கருதுவதில்லை என்றும் குறைகூறி வருகின்றனர். மியன்மாரில் நேற்று முன்தினம் புதிதாக 2,635 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்; 113 பேர் இறந்து விட்டனர்.
ரோஹிங்யா மக்களுக்குத் தடுப்பூசி
1 mins read
-

