ரோஹிங்யா மக்களுக்குத் தடுப்பூசி

ரோஹிங்யா மக்களுக்குத் தடுப்பூசி

1 mins read
ca9ea8ef-6903-4789-98a3-243df0a17bfb
-

யங்­கூன்: மியன்­மார் நாட்­டின் சிறு­பான்மை ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடப்­படும் என்று அந்­நாட்­டின் இரா­ணுவ அர­சாங்­கத்­தின் பேச்­சா­ளர் தெரி­வித்­துள்­ளார். 2017ஆம் ஆண்­டில் இரா­ணுவ நட­வ­டிக்­கை­யின்­போது பல நூறா­யி­ரம் ரோஹிங்யா மக்­கள் மியன்­மா­ரில் இருந்து தப்பி, பங்­ளா­தே­ஷில் தஞ்­சம் புகுந்­த­னர். மியன்­மா­ரி­லேயே இருக்­கும் ரோஹிங்யா இனத்­த­வ­ரும், தாங்­கள் பாகு­பாட்­டு­டன் நடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் தங்­க­ளைக் குடி­மக்­க­ளா­கவே கரு­து­வ­தில்லை என்­றும் குறை­கூறி வரு­கின்­ற­னர். மியன்மாரில் நேற்று முன்தினம் புதிதாக 2,635 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்; 113 பேர் இறந்து விட்டனர்.