புதுடெல்லி: தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருமானம் ஐம்பது விழுக்காடு கூடிஉள்ளது.
ஆனால் மக்களுடைய வருமானம் அதிகரிக்கவில்லையே என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் கொள்கை மற்றும் திட்டங்களை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அந்த வகையில், 2019-20 தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருமானம் ஐம்பது விழுக்காடு உயர்ந்துள்ளதுடன் மொத்தம் ரூ.3,623,28 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், கட்சியின் வருமானம் உயர்ந்தாலும் மக்களின் வருமானம் உயரவில்லையே," என்று ராகுல் காந்தி பதிவிட்டு உள்ளதாக தினத்தந்தி நாளிதழ் தெரிவித்தது.

