உந்துகணை தயாரிக்க போட்டி

உந்துகணை தயாரிக்க போட்டி

1 mins read
10666840-797d-4b8f-9f35-25b7da3dd20f
-
Google News Preferred Icon

புதுடெல்லி: செயற்கைக் கோள்களை ஏவப் பயன் படுத்தப்படும் பி.எஸ்.எல்.வி உந்துகணைகளைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தைக் கைப்பற்ற மூன்று பெரிய நிறுவனங்கள் போட்டியிடு கின்றன. அதானி குழுமத்தின் தலைமையிலான கூட்டு நிறுவனம், எல் அண்டு டி தலைமையிலான கூட்டு நிறுவனம், பி.எச்.இ.எல்., ஆகியவை போட்டி போடு கின்றன.

இது, மொத்தம் ஐந்து உந்துகணைகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்த மாகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ஐ.எஸ்.ஆர்.ஓ.வுக்கு வெளியே உள்ள நிறுவனங்கள் முதன் முதலாக செயற்கைக் கோளை ஏவு வதற்கான வாகனத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை முற்றாக தயாரிக்கவுள்ளன.

இவ்வாண்டு இறுதியில் ஒப்பந்தத்துக்கான நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும் எனத் தெரிகிறது.