தங்கம் விலை திடீர் உயர்வு

தங்கம் விலை திடீர் உயர்வு

1 mins read
5e02ed3c-d9e7-4445-a77c-ab0cf7be33de
-
Google News Preferred Icon

சென்னை: தங்கம் விலை மீண்டும் நேற்று பவுனுக்கு ரூ.36,000ஐ தாண்டியது.

நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.35,672க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் நேற்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.384 அதிகரித்து ரூ.36,054க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.4,507 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.68,700ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரு.68.70க்கு விற்கப்பட்டது.