அணிவகுக்கும் பண்டிகைகள்: மத்திய அரசு எச்சரிக்கை

அணிவகுக்கும் பண்டிகைகள்: மத்திய அரசு எச்சரிக்கை

2 mins read
76880671-3c0e-4258-83d0-231b532e6e98
நாடு முழுவதும் வீடற்றவர்கள் இரவில் தங்கு வதற்கான மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. தற்போது அங்கு தங்கி உள்ளவர் களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப் படுகிறது. அகமதாபாத் நகரில் அத்தகைய முகாமில் தங்கி உள்ள பெண்மணி தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்.படம்: ராய்ட்டர்ஸ் -

ஐந்து அம்சங்களை நடைமுறைப்படுத்த மாநிலங்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம்

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் சில மாவட்­டங்­களில் அன்­றாட கொரோனா தொற்­றுப் பாதிப்பு அதி­க­ரித்து வரு­வது கவலை அளிப்­ப­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

எனவே, தொற்­றுப் பர­வல் தடுப்பு வழி­காட்டி நெறி­மு­றை­கள் செப்­டம்­பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்­கப்­ப­டு­வ­தாக மத்­திய உள்­துறை செய­லர் அஜய் பல்லா கூறி­யுள்­ளார்.

இது­கு­றித்து மாநி­லங்­கள், யூனி­யன் பிர­தே­சங்­க­ளுக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­தில், உள்­ளூர் அள­வில் கொரோனா பாதிப்பு அதி­கம் உள்ள இடங்­களைத் தனிமைப்­ப­டுத்தி, தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

செப்­டம்­பர் மாதத்­தில் இருந்து தொடர்ந்து பல்­வேறு விழாக்­கள் வரு­வ­தா­கச் சுட்­டிக்­காட்டி உள்ள உள்­துறை, அந்த நேரத்­தில் மக்­கள் கூடு­வ­தைத் தடுக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்தி உள்­ளது.

ஆயி­ரக்­க­ணக்­கில் மக்­கள் கூடா­மல் இருக்க மாநி­லங்­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் தேவைப்­படும் இடங்­களில் உள்­ளூர் தடை விதிக்க வேண்­டும் என்­றும் அஜய் பல்லா தமது கடி­தத்­தில் வலி­யு­றுத்தி உள்­ளார்.

"முகக் கவ­சம் அணி­வது, கைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்­கடி கழு­வு­வது போன்ற முன்­னெச்­ச­ரிக்­கை­களை மக்­கள் பின்­பற்­று­வதை தொடர்ந்து கண்­கா­ணித்து உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

"மேலும், கொரோனா பரி­சோ­தனை, பாதிக்­கப்­பட்­ட­வ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­களைக் கண்­ட­றி­தல், சிகிச்சை அளித்­தல், தடுப்­பூசி போடு­வதை உறுதி செய்­தல், கொரோனா முன்னெச்­ச­ரிக்­கைகளைத் தவ­றா­மல் கடைப்­பி­டித்­தல் ஆகிய ஐந்து அம்சங்­களை நடைமுறைப்­ப­டுத்த மாநி­லங்­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என்று அஜய் பல்லா தமது கடிதத்தில் மேலும் தெரி­வித்­துள்­ளார்.