கேரளாவில் பரவும் புதிய நோய்: மக்கள் அச்சம்

கேரளாவில் பரவும் புதிய நோய்: மக்கள் அச்சம்

1 mins read
05271e16-c2e3-46e2-8e30-ff31ad203dd8
-

திரு­வ­னந்­தபுரம்: கொரோனா தொற்­றுப் பர­வல் தொடர்ந்து அதி­க­ரித்து வரும் நிலை­யில், கேர­ளா­வில் புதிய வகை நோய் பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது.

'மிஸ்க்' என்ற அந்­தப் புதிய நோயால் பாதிக்­கப்­பட்ட நான்கு குழந்­தை­கள் இறந்­து­விட்­ட­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

'மிஸ்க்' நோய் குழந்­தை­களைத் தான் அதி­கம் தாக்­கு­கிறது என்­கி­றார்­கள் சுகா­தார நிபு­ணர்­கள். அதி­லும், ஏற்­கெ­னவே கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட, 18 வய­துக்­கும் குறை­வான பதின்ம வயதினருக்கும் குழந்­தை­க­ளுக்­கும்­தான் பாதிப்பு அதி­கம் உள்­ளது என்­றும் சுட்­டிக்­காட்­டு­கி­றார்­கள்.

கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளாக கேர­ளா­வில் நூற்­றுக்­க­ணக்­கா­னோரை பலி­வாங்­கி­யுள்­ளது கொரோனா தொற்று. இதே கால­கட்­டத்­தில் அம்­மா­நி­லத்­தில் முந்­நூ­றுக்­கும் மேற்­பட்ட குழந்தை­க­ளுக்கு 'மிஸ்க்' பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

அவர்­களில் நான்கு குழந்­தை­கள் பலி­யா­கி­விட்­டன. மேலும் 'மிஸ்க்' நோய் தாக்­கி­ய­வர்­களில் சுமார் 95 விழுக்­காட்­டி­னர் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் என்­ப­தும் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து 'மிஸ்க்' நோய்க்­கான அறி­கு­றி­கள் குறித்து பொதுமக்கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களை கேரள அரசு துவங்கி உள்­ளது.

கேர­ளா­வில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­படு­வோ­ரின் அன்­றாட எண்­ணிக்கை தொடர்ந்து 30 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­கப் பதி­வாகி வரு­கிறது.

கொரோனா, 'மிஸ்க்' மட்­டு­மல்­லா­மல் கேர­ளா­வில் ஸிக்கா கிருமி பாதிப்­பும் காணப்­ப­டு­கிறது.

இந்த மும்­மு­னைத் தாக்­கு­தல் அம்­மா­நில மக்­களை அச்­சத்­தில் ஆழ்த்தி உள்­ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.