மக்கள் மீது பழிபோடாதீர்: கேரள அரசுக்கு மத்திய அமைச்சர் முரளிதரன் கண்டனம்

மக்கள் மீது பழிபோடாதீர்: கேரள அரசுக்கு மத்திய அமைச்சர் முரளிதரன் கண்டனம்

1 mins read
bfebc1c3-3e83-4f09-b4d6-4e92a5d92d82
-

புது­டெல்லி: கொரோனா கிரு­மித் தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் கேரள அரசு தோல்வி அடைந்­து­விட்­ட­தாக மத்­திய அமைச்­சர் முர­ளி­த­ரன் குற்­றம்­சாட்டி உள்­ளார்.

இத்­த­கைய சூழ­லில் மக்­க­ளைக் குறை கூறா­மல் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தில் கேரள அரசு கவ­னம் செலுத்த வேண்­டும் என­வும் அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

கேர­ளா­வில் அண்­மைய சில தினங்­க­ளாக அன்­றாட கொரோனா தொற்­றுப் பாதிப்பு எண்­ணிக்கை 30 ஆயி­ரத்­துக்­கும் மேலா­கப் பதி­வாகி வரு­கிறது. அங்கு கட்­டுப்­பா­டு­களை அதி­க­ரிக்க வேண்­டும் என மத்­திய ஆய்­வுக்­குழு அறி­வு­றுத்தி உள்­ளது.

இந்­நி­லை­யில், பிரச்­சி­னை­களை அடை­யா­ளம் காண்­ப­தற்குப் பதி­லாக கேரள அரசு பொது­மக்­களை குற்­றம்­சாட்ட முயற்சி செய்­வ­தாக மத்­திய அமைச்­சர் முர­ளி­த­ரன் சாடி உள்­ளார்.

"வீட்டு தனி­மைப்­ப­டுத்­தல், தொடர்­புத் தட­ம­றி­தல் போன்­ற­வற்­றில் மாநில அரசு உரிய கவ­னம் செலுத்­த­வில்லை. இத­னைக் கண்­கா­ணிப்பு அமைப்­பு­கள் ஏற்­கெ­னவே சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

"அப்­போ­தும் கூட நட­வ­டிக்கை எடுக்­காத கேரள அரசு இப்­போது மக்­கள் மீது குற்­றம் சாட்­டு­கிறது. இத்­த­கைய போக்கை ஏற்க இய­லாது. மாநில அரசு இப்­போ­தா­வது விழித்­துக்கொள்ள வேண்­டும்," என்­றார் அமைச்­சர் முர­ளி­த­ரன்.