பெங்களூரு: கர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் நடைபெற்றுள்ளது.
அங்குள்ள நாயண்டஹள்ளி- கெங்கேரி இடையேயான ரயில் சேவையை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று தொடங்கிவைத்தார்.
மொத்தம் 42 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படும் இந்த புதிய சேவை நீட்டிப்புக்கான பணிகள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கின. முதற்கட்ட பணிகள் முடிவடைந்ததும் பெங்களூரில் நாகசந்திரா முதல் நாயண்டஹள்ளி பகுதி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.
இதையடுத்து இரண்டாம் கட்டப் பணிகள் இப்போது முடிவுக்கு வந்துள்ளன. இப்போது ரூ.1,920 கோடி செலவில் நாயண்டஹள்ளியில் இருந்து கெங்கேரி வரை 7.5 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிவடைந்திருப்பதை அடுத்து அதிகாரிகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் முதல்வர் பசவராஜ் பொம்மை.

