புதுடெல்லி: உச்ச நீதி மன்ற வரலாற்றில் முதன் முறையாக நேற்று ஒரே சமயத்தில் ஒன்பது நீதிபதிகள் பதவியேற்றனர். இவர்களில் மூவர் பெண் நீதிபதிகளாவர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையி லான குழுவின் பரிந்து ரையை ஏற்று உச்ச நீதி மன்றத்துக்கு மேலும் ஒன்பது நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது.
இவர்களில் பி.வி.நாகரத்னா உள்ளிட்ட மூன்று பேர் பெண் நீதிபதிகள். மேலும், பி.வி.நாகரத்னா உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் வாய்ப்புள்ளது. இவரது தந்தை வெங்கட ராமையா வும் கடந்த 1989ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். கடந்த 2010ஆம் ஆண்டு கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார் நாக ரத்னா. கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக நூற்றுக் கும் மேற்பட்ட வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
நாகரத்னாவுக்கு வரும் 2027ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமை நீதிபதியாகும் வாய்ப்புள்ள தாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

