போதைப்பொருள் விவகாரம்: மேலும் ஒரு கன்னட நடிகை கைதாக வாய்ப்பு

போதைப்பொருள் விவகாரம்: மேலும் ஒரு கன்னட நடிகை கைதாக வாய்ப்பு

1 mins read
c1a00217-4df7-4b9d-92a9-a2f4e2fea27b
-

பெங்­க­ளூரு: போதைப்­பொ­ருள் தொடர்­பான வழக்­கில் மேலும் ஒரு கன்­னட நடிகை கைது செய்­யப்­பட வாய்ப்­புள்­ள­தாக வெளி­யான தக­வல் கர்­நா­ட­கா­வில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக கர்­நா­ட­கா­வில் போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரி­வி­னர் எடுத்து வரும் அதி­ரடி சோதனை நட­வ­டிக்­கை­களில் பல­ரும் சிக்கி வரு­கின்­றனர்.

பெங்­க­ளூ­ரில் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யின்­போது, கன்­னட நடி­கை­கள் ராகினி திவேதி, சஞ்­சனா கல்­ராணி உட்­பட 16 பேர் கைது செய்­யப்­பட்­ட­ன‌ர். அவர்­கள் போதைப் பொருள் பயன்­ப­டுத்­தி­யது உறுதி செய்­யப்­பட்­டது. அனை­வ­ரும் இப்­போது சிறை­யில் உள்­ள­னர்.

முன்­ன­தாக ஆறு பேரி­ட­மும் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யின் போது போலி­சா­ருக்­குப் பல்­வேறு முக்­கிய தக­வல்­கள் கிடைத்­தன.

குறிப்­பாக, நைஜீ­ரி­யாவை சேர்ந்த 31 வய­தான தாமஸ் என்­ப­வர்­தான் கன்­னட திரை­யு­ல­கத்­து­டன் தொடர்­பில் உள்­ள­வர்­க­ளுக்­கும் மற்ற முக்­கிய பிர­மு­கர்­க­ளுக்­கும் போதைப்­பொ­ருள்­கள் விநி­யோ­கிப்­பது தெரிய வந்­தது. அவ­ரும் போலி­சா­ரி­டம் சிக்­கி­னார்.

பின்­னர் அவர் அளித்த தக­வ­லின் பேரில் காவல்­துறை நேற்று முன்­தி­னம் கன்­னட நடிகை சோனியா அகர்­வா­லின் (தமி­ழில் நடிப்­ப­வர் அல்ல) பெங்­க­ளூரு வீட்­டில் சோதனை மேற்­கொண்­ட­னர். அப்­போது, 40 கிராம் கஞ்சா, மதுப்­புட்­டி­கள் ஆகி­யவை பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. இதே­போல் தொழி­ல­தி­பர் பரத், நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்­பா­ளர் வசனா சின்­னப்பா ஆகி­யோ­ரின் வீடு­களில் நடத்­தப்­பட்ட சோத­னை­யின் போதும், கஞ்சா கைப்­பற்­றப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மூவ­ரது வீட்­டி­லும் போதைப்­பொ­ருள் சிக்­கி­யுள்­ளதை அடுத்து, எந்த நேரத்­தி­லும் அவர்்­கள் கைது செய்­யப்­பட வாய்ப்­புள்­ள­தா­கத் தெரி­கிறது.