மூன்றாவது அலை: உத்தவ் வேண்டுகோள்

1 mins read
5acec1ed-843c-4cfe-9af3-53c790f1cb3f
கோல்கத்தாவில் நேற்று முன்தினம் கனமழைக்கு மத்தியிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பெண்கள் தடுப்பூசி மையத்துக்கு வெளியே கையில் குடைகளை ஏந்தியபடி காத்திருந்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: போராட்­டங்­கள் என்ற பெய­ரில் மக்­கள் கூட்­ட­மா­கக் கூடு­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என மகா­ராஷ்­டிர முதல்­வர் உத்­தவ் தாக்­கரே கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

குறிப்­பாக, பண்­டி­கை­களை முன்­னிட்டு மக்­கள் ஒன்­று­கூ­டு­வது தவிர்க்­கப்­பட வேண்­டும் என்று அவர் அறி­வு­றுத்தி உள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றின் மூன்­றா­வது அலை எந்­நே­ரத்­தி­லும் பர­வக்­கூ­டும் என மத்­திய அரசு தொடர்ந்து எச்­ச­ரித்து வரு­கிறது. இதைச் சுட்­டிக்­காட்டி உள்ள முதல்­வர் உத்­தவ் தாக்­கரே, மகா­ராஷ்­டி­ரா­வில் தகுந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

பிள்­ளை­யார் சதுர்த்­தி­யைக் கொண்­டா­டும் வகை­யில் பொது­மக்­கள் ஒரே இடத்­தில் அதி­க­மா­கத் கூடு­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், இது தொடர்­பாக மாநில அர­சு­க­ளுக்கு கடி­தம் ஒன்றை மத்­திய அரசு அனுப்பி உள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்.

"ஒரு­சி­லர் நெருக்­க­டி­யான சூழ்­நி­லை­யில் யாத்­தி­ரை­களை மேற்­கொள்­கின்­ற­னர். இத்­த­கைய போக்கு துர­தி­ருஷ்­ட­வ­ச­மா­னது. சாமா­னிய மக்­க­ளின் வாழ்க்கை அசா­தா­ரண சூழ­லுக்­குத் தள்­ளப்­பட இத்­த­கைய போக்­கும் ஒரு கார­ண­மா­கிறது," என்­றார் உத்­தவ்.

மூன்­றா­வது அலை நெருக்­க­டியை எதிர்­கொள்ள மாநில அர­சு­கள் முன்­னேற்­பாடு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். நாட்டில் உயிர்­வாயு வச­தி­க­ளு­டன் கூடிய படுக்­கை­க­ளின் எண்­ணிக்கை எட்டு மடங்கு அதி­க­ரித்து 416,947ஆக உள்­ளது. தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட படுக்­கை­க­ளின் எண்­ணிக்கை 10,180இல் இருந்து 1.8 மில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்­ளது. தீவிர சிகிச்­சைப் பிரி­வு படுக்­கை­க­ள் 124,598ஆக அதி­க­ரிக்கப்பட்டுள்ளன.