தலிபான்-இந்தியா பேச்சு

தலிபான்-இந்தியா பேச்சு

2 mins read
930ed111-bc7d-4c2b-9951-643626423e2f
-

புது­டெல்லி: கடந்த சில நாள்­க­ளாக தலி­பான் அமைப்­பு­டன் முதன்­முறை­யாக அதி­கா­ர­பூர்வ பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தாக இந்­தியா தெரி­வித்­து உள்­ளது.

ஆப்­கா­னிஸ்­தா­னின் புதிய ஆட்சி­யா­ளர்­க­ளான தலி­பா­னின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க இப் பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது.

கத்­தா­ருக்­கான இந்­தி­யத் தூதர், கத்­தா­ரில் உள்ள தலி­பான் அர­சி­யல் பிரி­வுத் தலை­வ­ரான ஷெர் முகம்­மது அப்­பாஸ் ஸ்டா­னிக்­சா­ய் உடன் பேச்சு நடத்­தி­ய­தாக இந்­திய வெளி­யு­றவு அமைச்சு கூறியது.

கத்­தார் தலை­ந­கர் தோஹா­வில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கத்­தில் இச்­சந்­திப்பு நடந்­தது.

இந்­தி­யா­விற்கு எதி­ரான நட­வடிக்­கை­க­ளுக்­கா­க­வும் பயங்­க­ர­வா­தத்­திற்­கா­க­வும் எந்த வகை­யிலும் ஆப்­கானை பயன்­ப­டுத்­தக்­கூடாது என்று இந்­தி­யா­வின் நிலைப்­பாட்டை திரு மிட்­டல் எடுத்­து­ரைத்­தார். இந்­தியா முன்­வைத்த விவ­கா­ரங்­க­ளுக்­குச் சாத­க­மான வழி­க­ளிலும் தீர்­வு­கா­ணப்­படும் என்று திரு ஸ்டா­னிக்­சாய் உறு­தி அளித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

"ஆப்­கா­னில் சிக்­கித் தவிக்­கும் இந்­தி­யர்­க­ளின் பாது­காப்பு குறித்­தும் அவர்­கள் கூடிய விரை­வில் இந்­தியா திரும்ப வழி­வகை செய்­வது குறித்­தும் பேசப்­பட்­டது. இந்­தியா செல்ல விரும்­பும் ஆப்­கா­னி­யர்­க­ளின், குறிப்­பாக சிறு­பான்­மை­யி­ன­ரின் பய­ணம் தொடர்­பி­லும் பேசப்­பட்­டது.

பரம எதி­ரி­யான பாகிஸ்­தா­னு­டன் தலி­பான் அணுக்­க­மான உறவு கொண்­டி­ருப்­பது இந்­தியா நீண்­ட­கா­ல­மா­கவே கவலை தெரி­வித்து வந்த நிலை­யில், இந்­தப் பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது குறிப்­பிடத்­தக்­கது.

இந்­தி­யா­வு­டன் அர­சி­யல், பொரு­ளி­யல் உற­வு­கொள்ள தலி­பான் விரும்­பு­வ­தாக திரு ஸ்டா­னிக்­சாய் சில நாள்­க­ளுக்­கு­முன் தெரி­வித்­து இ­ருந்­தார்.

ஆப்­கா­னில் வளர்ச்­சிப் பணி­களுக்­காக இந்­தியா மூன்று பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ருக்­கு­மேல் முத­லீடு செய்­துள்­ளது.

இந்தியாவில் ராணுவப் பயிற்சி பெற்ற தலிபான் தலைவர்

இந்தியத் தூதர் தீபக் மிட்டலை கத்தாரில் நேற்று முன்தினம் சந்தித்த தலிபான் தலைவர் ஷெர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாய் (படம்), இந்திய ராணுவத்தின்கீழ் பயிற்சி பெற்றவர். 1979 முதல் 1982 வரை மூன்று ஆண்டுகாலம் நவ்காங்கில் உள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சிப்பாயாகவும் அதன்பின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவப் பயிலகத்தில் அதிகாரியாகவும் இவர் பயிற்சி பெற்றார். சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவரான இவர், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். இவர், முந்தைய தலிபான் ஆட்சியின்போது வெளியுறவுத் துணை அமைச்சராகச் செயல்பட்டார்.