40 மாடி இரட்டைக் கோபுரங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

40 மாடி இரட்டைக் கோபுரங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 mins read
f1fdcba9-40a4-4ca0-8dc7-a36584d66e77
-

புது­டெல்லி: நொய்­டா­வில் விதி­மீறிக் கட்­டப்­பட்­டுவரும் இரண்டு 40 மாடிக் குடி­யி­ருப்­பு­களை இடிக்­கும்­படி உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டு உள்­ளது.

'சூப்­பர்­டெக்' நிறு­வ­னத்­தின் வீட­மைப்­புத் திட்­டம் ஒன்­றில் கூடு­த­லா­கக் கட்­டப்­பட்ட அக்­கு­டியி­ருப்பு­களில் 950க்கும் மேற்­பட்ட வீடு­கள் அமைந்­துள்­ளன. அவை, தீப்­பா­து­காப்பு உள்­ளிட்ட பல்­வேறு விதி­களை­யும் கட்­டு­மான ஒழுங்­கு­முறை­க­ளை­யும் மீறிக் கட்­டப்­பட்­டு உள்­ள­தாக நீதி­ப­தி­கள் டி ஒய் சந்தி­ர­சூட், எம் ஆர் ஷா ஆகி­யோர் அடங்­கிய அமர்வு தெரி­வித்­தது.

இத­னால், இன்­னும் மூன்று மாதங்­க­ளுக்­குள் தனது சொந்த செல­வில் அந்த அடுக்­கு­மாடி வீடு­களை சூப்­பர்­டெக் நிறு­வ­னம் இடிக்க வேண்­டு­மென நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­டுள்­ள­னர்.

அத்­து­டன், அந்த இரட்­டைக் கோபு­ரக் குடி­யி­ருப்­பில் வீடு வாங்கி­ இருக்கும் அனை­வர்க்­கும் பணத்­தைத் திருப்­பித் தர­வேண்­டும் என்­றும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. இது­வரை 32 மாடி­கள் கட்­டப்­பட்­டுள்ள நிலை­யில், இன்­னும் ஒரு­வ­ரும் அங்கு குடி­யே­ற­வில்லை.

'எம­ரால்டு கோர்ட்' குடி­யி­ருப்­பா­ளர்­கள் நல்­வாழ்­வுச் சங்­கம், 'சூப்­பர்­டெக்' நிறு­வ­னத்­தின்­மீது வழக்கு தொடுத்­தது. பசு­மை­வெ­ளி­யில் அந்த இரட்­டைக் கோபு­ரங்­கள் கட்­டப்­ப­டு­வ­தா­க­வும் சூரிய ஒளி­யும் காற்­றும் வரா­மல் அவை தடுப்­ப­தா­க­வும் அச்­சங்­கம் தனது மனு­வில் குறிப்­பிட்­டி­ருந்­தது. இவ்­வ­ழக்­கில் ஒன்­பது ஆண்­டு­க­ளுக்­குப்­பின் தீர்ப்பு வெளி­யா­கி­யுள்ள நிலை­யில், அதனை மறு­ஆய்வு செய்­யும்­படி கோரவிருப்பதாக 'சூப்­பர்­டெக்' நிறு­வ­னம் தெரி­வித்­தது.