வாரத்தில் நான்கு நாள் வேலை, மூன்று நாள் விடுமுறை

அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்

புது­டெல்லி: வார வேலை நாட்­களை ஐந்­தில் இருந்து நான்­காகக் குறைக்­க­வும் பணி நேரத்தை 12 மணி நேர­மாக உயர்த்­த­வும் மத்­திய அரசு திட்­டம் வகுத்துள்ளது.

வாரத்துக்கு மூன்று நாள் விடுமுறையுடன் பணி­யா­ளர்­க­ளின் ஊதி­யத்­தி­லும் மாற்­றத்தை ஏற்­­படுத்­தக்­கூ­டிய புதிய தொழி­லா­ளர் விதி­மு­றை­கள் வரும் அக்­டோ­பர் மாதம் ஒன்­றாம் தேதி முதல் நடப்­புக்கு வர உள்­ள­தா­க மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்­தப் புதிய ஊதிய விதி­க­ளின் படி ஊழி­யர்­கள் பணி­பு­ரி­யும் நேரம் 9 மணி நேரத்­தி­லி­ருந்து 12 மணி நேர­மாக அதி­க­ரிக்­கப்­ப­ட உள்ளது.

வாரத்­திற்­கு 48 மணி நேரம் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளுக்கு மூன்று நாள் விடு­முறை தரப்பட உள்ளது.

தொழி­லா­ளர் நலனை மத்­திய அரசு ஒரு­போ­தும் விட்­டுக்­கொ­டுக்­காது. அனைவருக்­கும் இல­வச மருத்­து­வப் பரி­சோ­தனை செய்யவும் விதி­மு­றை­யில் மாற்­றங்­கள் செய்­யப்­ப­ட­வுள்­ளன.

உடல் நலம் பாதிப்பு, பிர­ச­வம் போன்ற கார­ணங்­க­ளுக்­காக அதிக பட்­சம் 240 நாள்கள் வரை விடு­முறை எடுக்கலாம் என்­றி­ருந்­தது. அது தற்­போது 300 நாட்­க­ளாக உயர்த்­தப்­ப­ட­வுள்­ளது.

புதிய ஊதியச் சட்­டத்­தில் அனைத்து ஊழி­யர்­க­ளுக்­கும் குறைந்­த­பட்ச ஊதி­யம் உறுதி செய்­யப்­படும். சமூகப் பாது­காப்­புக்­காக எல்லா சம்­பளப் படி­க­ளி­லும் பிஎஃப் இணைக்­கப்­படும் என்­றும் தெரி விக்­கப்­பட்­டுள்­ளது.

தொழி­லா­ளர் சட்­டங்­களில் மாற்­றங்­கள் ஏற்­ப­டுத்­தும் நான்கு புதிய விதி­கள் கடந்த 2019-20ஆம் ஆண்­டு­களில் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டன.

இந்­தப் புதிய விதி­க­ளைக் கடந்த ஏப்­ரல் 1ஆம் தேதி முதல் அமல்­படுத்த மத்­திய அரசு திட்­ட­மிட்­டது. பல்­வேறு கார­ணங்­க­ளால் அது தள்­ளிப்போனது. இந்­நி­லை­யில், அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் அம­லுக்கு வர உள்­ள­தாக செய்­தி­கள் தெரி­வி­த்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!