'கடல் தங்கம்' சிக்கியது; ஒரே நாளில் கோடீஸ்வரரான மீனவர்

2 mins read
5f57cdf7-00a9-4f9e-a9cc-85573d48ca01
தான் பிடித்த மீன்களுடன் பூரிப்பில் சந்திரகாந்த். படம்: ஊடகம் -

பால்­கர்: மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தைச் சேர்ந்த மீன­வர் ஒரு­வ­ரின் வலை­யில் அரி­ய­ வகையைச் சேர்ந்த 'கடல் தங்­கம்' என்று அழைக்கப் படும் விலை உயர்ந்த கோல் (ghol) மீன்­கள் சிக்­கி­ய­தால், அவர் ஒரே நாள் இர­வில் கோடீஸ்­வ­ர­ராகி உள்­ளார்.

பால்­கர் மாவட்­டத்­தைச் சேர்ந்த சந்­தி­ர­காந்த் தாரே என்பவருக்குத் தான் இந்த கோல் மீன்களின் அதிர்ஷ்­டம் கிட்டியுள்ளது.

சக மீன­வர்­கள் எட்டுப் பேரு­டன் வாத்­வான் என்ற பகு­தி­யில் மீன்­பி­டித்­துக்கொண்­டி­ருந்­தார் சந்­தி­ர­காந்த் தாரே.

அப்­போது, அவர் விரித்த வலை­யில் மீன்­கள் சிக்­கியதை அடுத்து, அதை பட­குக்­குள் இழுத்­துப் பார்த்த ேபாது இன்ப அதிர்ச்சி அடைந்­தார்.

ஏனெனில் பத்து, இருபது மீன்கள் மட்டுமல்ல; 157 கோல் மீன்­கள் சந்­தி­ர­காந்த் விரித்த வலை­யில் சிக்­கி­யி­ருந்­தன.

மருந்­து­கள், அழகு சாத­னப் பொருட்­கள் தயா­ரிப்­புக்­குப் பயன்­படுத்தப்படும் இவ்­வகை மீன்­களுக்கு ஹாங்­காங், மலே­சியா, சிங்­கப்­பூர், தாய்­லாந்து உள்­ளிட்ட நாடு­களில் அதிக கிராக்கி உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அத­னால், அவற்­றின் விலை­யும் மிக அதி­கமாக உள்ளது.

'தங்க இதய மீன்' என மீனவர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த மீன்கள் அதிக அளவில் சிக்­கி­ய­தால் சந் திரகாந்த்துடன் வந்த இதர மீனவர்களும் மகிழ்ச்­சி­யில் திக்கு­ முக்­கா­டிப் போயி­னர்.

இந்த தக­வ­ல­றிந்த தனி­யார் நிறு­வ­னங்­கள் மீன்­களை ஏலம் எடுக்க போட்டிபோட்­டன.

உத்­த­ர­ப்பி­ர­தே­சம், பீகார் மாநி­லங்­க­ளைச் சேர்ந்த நிறுவனங்­கள் ஒரு கோடியே 33 லட்ச ரூபாய்க்கு கோல் மீன்­களை ஏலம் எடுத்­தன.

இந்தோ-பசி­பிக் கடல் பகுதியில் காணப்­படும் இந்த மீன், ஒரு கிலோ 5,000 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­வ­தா கவும் தகவல்கள் கூறியுள்ளன.