பருவநிலை மாற்றம் காரணமாக மின்னல் தாக்குதல் அதிகமாகி உயிர்பலி கூடியது

பருவநிலை மாற்றம் காரணமாக மின்னல் தாக்குதல் அதிகமாகி உயிர்பலி கூடியது

2 mins read
f9c54ced-1034-432a-bad3-8cecf437f61b
ராஜஸ்தானில் உள்ள சித்­தோர்­கர் கோட்­டை­யில் இந்த ஆண்டு தொடக்­கத்­தில் மின்­னல் வெட்­டி­ய­தில் ஒரு பகுதி இடிந்து தரை­யில் விழுந்­து­விட்­டது. அந்தக் கோட்டை வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய இடிதாங்கியை அமைக்கும் பணி நடந்தது. படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாக இந்­தி­யா­வில் மின்­னல் தாக்­கு­வது அதி­க­ரித்து உள்­ள­தா­க­வும் ஆண்­டு­தோ­றும் ஏறத்­தாழ 2,500 பேர் மின்­னல் வெட்டி மாண்­டு­வி­டு­வ­தா­க­வும் அர­சாங்­கப் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த எண்­ணிக்கை அமெ­ரிக்­கா­வில் 45 ஆக இருக்­கிறது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இடி­யு­டன் மழை பெய்­யும்­போது மின்­னல் தாக்கும் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து உள்­ள­தா­க­வும் கால்­ந­டை­களும் இதர பிரா­ணி­களும் அவற்­றுக்குப் பலி­யா­வ­தா­க­வும் தகவல்கள் தெரி­விக்­கின்­றன.

வட­கி­ழக்கு அசாம் மாநி­லத்­தில் கடந்த மே மாதம் மின்­னல் தாக்கியதில் 18 யானை­கள் மாண்­டு­விட்­டன. இந்த ஆண்டு தொடக்­கத்­தில் சித்­தோர்­கர் கோட்­டை­யில் மின்­னல் வெட்­டி­ய­தில் ஒரு பகுதி இடிந்து தரை­யில் விழுந்­து­விட்­டது.

அதே­போல, ராஜஸ்­தான் மாநி­லத்­தில் அமர் கோட்­டை­யில் கடந்த ஜூலை மாதம் மின்­னல் தாக்­கி­ய­தில் பலர் மாண்­ட­னர்.

பொது­வாக இந்­தி­யா­வில் மின்­னல் தாக்­கு­தல் அதி­க­ரித்து இருப்­ப­தாக அரசு புள்ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­ய­வ­ரு­கிறது.

மார்ச் மாதம் வரைப்­பட்ட 12 மாத காலத்­தில் ஏறத்­தாழ 19 மில்­லி­யன் முறை மின்­னல் தாக்கி இருப்­ப­தா­க­வும் இது அதற்கு முந்­தைய ஆண்­டை­விட மூன்­றில் ஒரு பங்கு அதி­கம் என்­ப­தும் தெரி­ய­வந்­துள்­ளது. பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாக உல­கில் வெப்­ப­நிலை அதி­க­ரித்து வரு­வதே இதற்­கான கார­ணம் என்று 'இந்­திய மின்­னல் மீள்­தி­றன் இயக்­கம்' என்ற ஓர் இயக்­கத்­தைச் சேர்ந்த சஞ்சை ஸ்ரீவஸ்­தவா என்ற வல்­லு­நர் தெரி­வித்­தார்.

பரு­வ­நிலை மாற்­றத்­தா­லும் ஓர் இடத்­தின் நிலம் வெப்­ப­ம­டை­வ­தா­லும் காற்­றில் ஈரப்­ப­தம் கூடு­வ­தா­லும் திடீ­ரென பெரும் மின்­னல் தாக்­கும் நிலை ஏற்­ப­டு­கிறது என்று அவர் கூறி­ய­தாக ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. நக­ரப் பகு­தி­களி­லும் மின்­னல் தாக்­கும் சம்­ப­வம் அதி­க­மாகி வரு­வ­தாகக் கணிக்­கப்­ப­டு­கிறது.

பரு­வ­நிலை மாற்­றத்­தால் கடல்­மட்­டம் உய­ரு­கிறது, வெப்ப அலை அதி­க­ரிக்­கிறது, இதர பல தொடர் விளை­வு­களும் ஏற்­ப­டு­கின்­றன. 1.3 பில்­லி­யன் மக்­கள் வசிக்­கும் இந்­தி­யா­விற்கு இவற்­றின் கார­ண­மாக மின்­னல் மிரட்­டல் அதி­க­ரித்து இருக்­கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இடி, மின்­னல் கார­ண­மாக ஏற்­ப­டக்­கூடிய மர­ணங்­களில் பெரும்­பா­லா­ன­வற்றைத் தவிர்த்­து­வி­ட­லாம் என்று அவர் தெரி­வித்­தார். கட்­ட­டங்­களில் இடி­தாங்­கி­களைப் பொருத்த வேண்­டி­யது கட்­டா­ய­மா­னது என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.