பிரி­வி­னை­வா­தத் தலை­வர்­ மரணம்: காஷ்மீரில் முடக்கம் நீட்டிப்பு

பிரி­வி­னை­வா­தத் தலை­வர்­ மரணம்: காஷ்மீரில் முடக்கம் நீட்டிப்பு

1 mins read
1f383a98-9720-489d-ba5f-90f8d3f45c97
-

ஸ்ரீந­கர்: காஷ்­மீ­ரின் முக்­கிய பிரி­வினை­வா­தத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சையது அலி ஷா கிலானி தமது 92வது வய­தில் புதன்­கி­ழமை கால­மா­னார்.

கிலா­னிக்குப் பொது இறு­திச் சடங்கு நடத்த அனு­ம­திக்க அதி­கா­ரி­கள் மறுத்­து­விட்­ட­னர்.

அதை­ய­டுத்து ஆர்ப்­பாட்­டக்­காரர்­க­ளுக்­கும் பாது­காப்­புப் படை­யி­ன­ருக்­கும் இடை­யில் கைக­லப்பு மூண்­ட­தா­கத் தக­வல்­கள் கூறின.

இந்­நி­லை­யில், ஆயி­ரக்­க­ணக்­கான இந்­திய பாது­காப்புப் படை­வீரர்­கள் காஷ்­மீர் முழு­வ­தும் முடக்­கத்தை அமல்­ப­டுத்­தி­னர்.

பிரி­வி­னை­வா­தத் தலை­வர் கிலானி மர­ணத்தை அடுத்து காஷ்­மீ­ரில் இணை­யச் சேவை­களும் கை பே­சிச் சேவை­களும் துண்­டிக்­கப்­பட்­டன. இந்தத் தடை தொட­ரும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஸ்ரீந­க­ரில் வியா­ழக்­கி­ழமை பின்­நே­ரத்­தில் அரசு தரப்­புக்­கும் குடி­மக்­க­ளுக்­கும் இடை­யில் கைக­லப்பு ஏற்­பட்­டதை அடுத்து ஆயி­ரக்­கணக்­கான போலி­சா­ரும் துருப்­பு­களும் சாலை­களில் தடுப்­பு­களை அமைத்து பொது­மக்­கள் வீட்­டை­விட்டு வெளியே­ வ­ரவிடாமல் தடுத்­த­னர்; சுற்­றுக்­கா­வலில் ஈடு­பட்­ட­னர்.

கற்­களை வீசி எறிந்து ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­ய­வர்­களைக் கலைக்க போலி­சார் கண்­ணீர் புகைக் குண்­டு­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.