சட்டீஷ்கரில் அரசியல் புயல்

சட்டீஷ்கரில் அரசியல் புயல்

1 mins read
d4a1eaa0-84e0-4313-b6c1-1c58fb76aba0
-

ஜக்­தல்­பூர்: சட்­டீஷ்­கர் மாநி­லத்­தின் பாஜக பொதுச் செய­லாள ரான டி புரந்­தேஸ்­வரி என்பவர் தெரி­வித்­துள்ள ஒரு கருத்து அந்த மாநில அர­சி­ய­லில் பெரும் புய­லைக் கிளப்பி இருக்­கிறது.

தன்­னு­டைய கட்­சித் தொண்­டர்­கள் எச்­சில் துப்­பி­னால் அந்த எச்­சி­லில் முதல்­வர் புபேஷ் பாகலும் அவ­ரு­டைய அமைச்­ச­ர­வை­யும் அடித்­துச் செல்­லப்­பட்­டு­வி­டும் என்று புரந்­தேஸ்­வரி கூறி­னார்.

வரும் 2023 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பாஜ­கவை அரி­யணை ஏற்ற வேண்­டும் என்­றும் அதற்குப் பாடு­ ப­டு­மா­றும் கட்­சித் தொண்­டர்­களை வலி­யு­றுத்­தி­ய­போது அவர் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­தார்.

ஆளும் காங்­கி­ரஸ் கட்சி மக்­களை ஏமாற்­றி­விட்­டது என்­றும் ஆளும் கட்­சிக்குத் தேர்­த­லில் சரி­யான அடி கொடுக்க வேண்டும் என்­றும் அந்த மாது தொண்டர்­ க­ளி­டையே தெரி­வித்தது காணொளியாகவும் வெளி யானது. இதைக் கேட்டு கடும் கோப­ம­டைந்த ஆளும் தரப்­பி­னர், பதி­லடி கருத்­து­க­ளைத் தெரி­விக்­கத் தொடங்­கி­னர்.

"யாரா­வது ஆகா­யத்­தில் எச்­சில் துப்­பி­னால் அது துப்பியவர் மீது­தான் வந்து விழும்," என்று முதல்­வர் புபேஷ் கார­சா­ர­மா­கத் தெரி­வித்­தார்.

"பாஜக பொதுச் செய­லா­ளர் இப்­படி பேசு­வார் என்று நான் எதிர்­பார்க்­க­வில்லை. அவர், காங்­கி­ர­சில் இருந்­த­போது நன்­றா­கத்­தான் இருந்­தார்.

"பாஜ­க­வில் சேர்ந்­த­தும் இந்த நிலைக்கு ஆளா­கி­விட்­டார்," என்று செய்­தி­யா­ளர்­களி­டம் முதல்­வர் கூறி­ய­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.