கேரளாவில் குறையாத தொற்றுப் பாதிப்பு; தடுப்பூசி பற்றாக்குறை

கேரளாவில் குறையாத தொற்றுப் பாதிப்பு; தடுப்பூசி பற்றாக்குறை

2 mins read
9c208824-91c0-4825-b250-903cdda20b7f
-

பெங்­க­ளூரு: கேர­ளா­வில் கோவி­ஷீல்ட் கொரோனா தடுப்­பூ­சி­களுக்குப் பற்­றாக்­குறை நில­வு­வ­தாக அம்­மாநில சுகா­தார அமைச்­சர் வீணா ஜார்ஜ் தெரி­வித்­துள்­ளார்.

கொல்­லம், கோட்­ட­யம், எர்­ணா­கு­ளம், திருச்­சூர், கோழிக்­கோடு, கண்­ணூர் ஆகிய ஆறு மாநி­லங்­களில் கோவி­ஷீல்ட் தடுப்­பூ­சி­கள் அறவே கையி­ருப்­பில் இல்லை என்­றார் அவர்.

எனி­னும் அனைத்து மாவட்­டங்­களி­லும் கோவேக்­சின் தடுப்­பூ­சி­கள் குறைந்­தபட்ச அளவு கையி­ருப்­பில் உள்­ள­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

மாநி­லம் முழு­வ­தும் உள்ள 18 வய­துக்கு மேற்­பட்ட அனை­வ­ருக்­கும் இம்­மாத இறு­திக்­குள் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டு­விட வேண்­டும் என இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது கேரள அரசு. எனவே அதிக அள­வி­லான தடுப்­பூ­சி­கள் தேவைப்­ப­டு­கிறது என அமைச்­சர் வீணா ஜார்ஜ் கூறி­யுள்­ளார்.

"மீண்­டும் ஒரு­முறை கொரோனா தடுப்­பூசி பற்­றாக்­கு­றையை கேரளா எதிர்­கொண்­டுள்­ளது. தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை தடை­யின்றி நீடிக்க வேண்­டு­மெ­னில் கேர­ளா­வுக்கு கூடு­தல் எண்­ணிக்­கை­யி­லான தடுப்­பூ­சி­கள் தேவை," என்று அமைச்­சர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே கேரளாவில் நேற்று முன்­தி­ன­மும் சுமார் 29 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு தொற்­றுப்பாதிப்பு இருப்­பது உறுதி­யா­னது. இதை­ய­டுத்து அங்கு நாளை முதல் நடை­பெற இருந்த 11ஆம் வகுப்­புக்­கான தேர்­வுக்கு உச்ச நீதி­மன்­றம் இடைகாலத் தடை விதித்து உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது தொடர்பான மனுவை விசா­ரித்த நீதி­ப­தி­கள், ஒரு வார காலத்­துக்கு இந்­தத் தடை அமலில் இருக்­கும் என்று உத்­த­ர­வில் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் நாடு முழு­வ­தும் நேற்று முன்­தி­னம் புதி­தாக மேலும் 42,618 பேருக்கு கொரோனா தொற்­றுப்­பா­திப்பு ஏற்­பட்­டுள்­ளது.

ஒரே நாளில் 330 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். இதன்­மூ­லம் உயி­ரி­ழந்­தோர் மொத்த எண்­ணிக்கை 440,225 ஆக உயர்ந்­துள்­ளது.

நேற்று முன்தினம் மட்­டும் கொரோனா பாதிப்­பில் இருந்து 36,385 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். நாடு முழு­வ­தும் தொற்­றுக்கு 405,681 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் மகா­ராஷ்­டி­ரா­வில் மீண்­டும் முழு ஊர­டங்கு அறி­விக்கப்­பட்ட சாத்­தி­ய­மில்லை என்று அம்­மா­நில சுகா­தார அமைச்­சர் ராஜேஷ் தோபே கூறி­யுள்­ளார்.

எனி­னும் பண்­டிகைகளைக் கொண்­டா­டும்­போது கூட்­டத்தை தவிர்க்க வேண்­டும் என அவர் கேட்­டுக்கொண்­டுள்­ளார்.