புதுடெல்லி: அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அப்போது பயங்கரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் உலகில் இடமில்லை என்பதை இருதரப்பும் ஒத்துக்கொண்டதாக டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சக்திகளுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஒன்றிணைந்து நிற்க வேண்டியதன் அவசியத்தை இருதரப்பும் வலியுறுத்துவதாகவும் அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு கொரோனா காலத்தில் அந்நாடு வழங்கிய உதவிகள் மிகுந்த பாராட்டுக்குரியது என்றும் பிரதமர் மோடி தமது பதிவில் கூறியுள்ளார்.
"வட்டார அளவிலான முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டது.
"துபாயில் நடைபெற உள்ள கண்காட்சிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்," என்றும் பிரதமர் மோடி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் தொலைபேசி வழி தொடர்புகொண்டு பேசியதாகவும் வட்டார அளவிலான பொதுப்பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.