'நீட்' தேர்வை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

1 mins read
5d218260-be41-4881-9239-fddf218f0ef0
-

புதுடெல்லி: மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வை (நீட்) எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து தேர்வு எழுதுவோர் விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மற்ற படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இதனால் நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்குச் சிக்கல் ஏற்படும் என்றும் ஒருதரப்பினர் புகார் எழுப்பினர்.

இதையடுத்து நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்த னர். விசாரணை முடிவடைந்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீட் தேர்வை சுமார் 1.6 மில்லியன் பேர் எழுத உள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஒருசிலர் எதிர்ப்பதால் தேர்வை ஒத்திவைக்க இயலாது என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.