கொரோனா, நிஃபா கிருமியின் இருமுனைத் தாக்குதலால் அல்லாடும் கேரளா: நோய்ப்பரவல் தடுப்புப் பணிகள் தீவிரம்

திரு­வ­னந்­த­புரம்: கொரோனா தொற்­றுப்­ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த கேரள மாநி­லம் போராடி வரும் நிலை­யில், அங்கு 'நிஃபா' கிரு­மிப்­ப­ர­வல் புது அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்­துள்­ளது.

அங்கு 12 வயது சிறு­வன் 'நிஃபா' கிரு­மித் தாக்­கு­த­லால் உயி­ரி­ழந்­தி­ருப்­பதை அடுத்து நோய்ப்­ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­படும் என கேரள சுகா­தார அமைச்­சர் வீணா ஜார்ஜ் தெரி­வித்­துள்­ளார்.

பழந்­தின்னி வௌவால்­க­ளின் உமிழ்­நீர் மூலம் பர­வு­கிறது 'நிஃபா' தொற்று. கடந்த 2018ஆம் ஆண்­டில் கேர­ளா­வில் இந்­தப் பாதிப்பு ஏற்­பட்­டது. அச்­ச­ம­யம் கோழிக்­கோடு பகு­தி­யில் முதன்­மு­றை­யாக கண்­ட­றி­யப்­பட்ட 'நிஃபா' கிரு­மித்­தொற்­றால் அம்­மா­நி­லத்­தில் ஒரு மாதத்­துக்­குள் 17 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

அதன் பிறகு மாய­மாகி இருந்த 'நிபா' கிரு­மித்­தொற்று, இப்­போது மீண்­டும் பர­வத் தொடங்கி இருப்­பது கேரள மக்­களை அச்­சத்­தில் ஆழ்த்தி உள்­ளது.

இம்­மு­றை­யும் கோழிக்­கோடு பகு­தி­யில்­தான் 'நிஃபா' கிருமி தனது கணக்­கைத் துவங்­கி­யுள்­ளது. 12 வய­துச் சிறு­வன் 'நிஃபா' கிரு­மித் தாக்­கு­த­லுக்கு ஆளாகி உயி­ரி­ழந்த நிலை­யில், அச்­சி­று­வ­னு­டன் மிக நெருங்­கிய தொடர்­பில் இருந்­தது உறுதி செய்­யப்­பட்ட 20 பேரைக் கண்­கா­ணிப்­புக் குழு அடை­யா­ளம் கண்டு தனி­மைப்­ப­டுத்தி உள்­ளது.

அவர்­களில் இருவருக்கு பாதிப்­புக்கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­வ­தா­க­வும் அரு­கி­லுள்ள கண்­ணூர், மலப்­பு­ரம் மாவட்­டங்­க­ளுக்கு நோய்ப்­ப­ர­வல் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­ப­ட்டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் வீணா ஜார்ஜ் தெரி­வித்­துள்­ளார்.

கோழிக்­கோடு பகு­தி­யில் உள்ள சிறு­வ­னின் வீட்­டில் இருந்து சுமார் மூன்று கிலோ­மீட்­டர் பரப்­ப­ளவு உள்ள பகு­தியை போலி­சார் தங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­துள்­ள­னர். சிறு­வ­னின் உடல் 12 அடி ஆழத்­தில் அடக்­கம் செய்­யப்­பட்­டது. சிறு­வ­னு­டன் தொடர்­பில் இருந்­த­தாக கரு­தப்­படும் மேலும் 188 பேர் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளுக்கு ரத்­தப் பரி­சோ­தனை நடத்­தப்­பட உள்­ளது.

இதற்­கி­டையே, கேர­ளா­வுக்கு நோய்க் கட்­டுப்­பாட்டு மைய குழு ஒன்றை மத்­திய அரசு அனுப்பி வைத்­துள்­ளது. அக்­கு­ழு­வி­னர் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளைப் பார்­வை­யிட்டு மருத்­துவ, தொழில்­நுட்ப அடிப்­ப­டை­யில் பல்­வேறு ஆலோச­னை­களை மாநில அர­சுக்கு வழங்­கு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!