டெங்கி: கொசுக்களை ஒழிக்க மீன்கள்

டெங்கி: கொசுக்களை ஒழிக்க மீன்கள்

1 mins read
a287bfa4-dd58-4f18-bb3b-285f8be02d58
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தே­சத்­தில் டெங்கி காய்ச்­சல் பரவி வரு­கிறது. ஃபிரோஸா­பாத் மாவட்­டத்­தில் மட்­டும் 40 சிறாா்கள் உள்­பட 51 போ் மாண்­டு­விட்­டனா்.

இந்­நி­லை­யில், டெங்கி அதி­கம் பர­வும் பகுதிகளிலுள்ள குளங்­களில் கொசு முட்­டை­களை உண்­ணும் மீன்­கள் விடப்­பட்டு வரு­கின்­றன. அனைத்து நீர் நிலை­க­ளி­லும், சுமார் 25,000 மீன்­கள் வீதம் விடப்­ப­டுன்­றன.

இதன் மூலம், குளங்­க­ளி­லுள்ள குப்பை மற்­றும் அல்லி இலை­களில் முட்­டை­யிட்டு உற்­பத்­தி­யா­கும் கொசுக்­க­ளின் எண்­ணிக்கை குறை­யும் என்றும் டெங்கிப் பரவல் கட்டுப்படும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.