தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படகு விபத்து: 87 பேர் மீட்பு, 3 அதிகாரிகள் இடைநீக்கம்

2 mins read
d85088a9-9ebb-4c30-8d7a-8777491f631d
-

கவு­காத்தி: அசாம் மாநி­லம், ஜோர்­ஹட் மாவட்­டத்­தில் ஓடும் பிரம்­ம­புத்­திரா நதி­யில் இரண்டு பய­ணி­கள் பட­கு­கள் ஒன்­று­டன் ஒன்று மோதி கவிழ்ந்­தன.

எதிர்­பா­ரா­மல் நடந்த இந்த விபத்து கார­ண­மாக ஏரா­ள­மா­னோர் பட­கில் இருந்து தண்­ணீ­ரில் விழுந்­த­னர். விழுந்த உடன் பல­ரும் போராடி மற்ற பட­கு­க­ளைப் பிடித்­துக் கொண்டு கரை­யே­றி­னார்­கள்.

இந்த விபத்­தில் 100க்கும் மேற் பட்­டோர் காணா­மல் போய்­விட்ட தாக ஆரம்­பக் கட்ட தக­வல்­கள் கூறிய நிலை­யில், தொடர்ந்து நடை­பெற்று வந்த மீட்­புப் பணி­யின் வழி இது­வரை 87 பேர் மீட்­கப்பட்­டுள்­ள­னர். ஒரு பெண் உயிரிழந்­துள்­ளார். காயம் அடைந்­த­வர்­கள் பலரும் மருத்­து­வ­ம­னை­க­ளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்­னும் சில­ரைக் காண­வில்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது. அவர்களைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதற்­கி­டையே, அசா­மின் உள்­நாட்டு நீர் போக்­கு­வ­ரத்து துறை யைச் சேர்ந்த மூன்று அதி­கா­ரி­கள் பணி­யில் அலட்­சி­ய­மாக இருந்­த­தன் கார­ண­மாக இடை­நீக்­கம் செய்­யப்பட்­டுள்­ள­னர்.

பய­ணி­களை மீட்­ப­தற்­கான அனைத்து முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக டுவிட்­டர் பதி­வில் பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­தி­ருந்­தார்.

ஏற்­கெனவே தேசிய, அசாம் மாநில பேரி­டர் மீட்­புப்­ப­டை­யி­னர் இந்த மீட்­புப் பணி­களில் ஈடு­பட்டு வந்த நிலை­யில், இந்­திய இராணு வமும் மீட்­புப்­ப­ணி­களில் நேற்று கள­மி­றங்­கி­யது.

அசாம் முதல்­வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, விபத்து நடந்த இடத்தை நேற்று நேரில் சென்று பார்­வை­யிட்டு, மீட்­புப் பணியை துரிதப்படுத்துமாறு மாவட்ட அதி­காரிகளுக்கு உத்­த­ர­விட்­டார்.

மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவ அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஒரு குழந்தை உட்பட 87 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாயமானவர்களை உயிருடன் மீட்பதற்கு உறவினர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். ஒரு பெண் தனது கணவரை நினைத்து அழுகிறார்.

படம்: ஊடகம்